ஷேர்லக்: உஷார்... உச்சத்தில் மிட், ஸ்மால் கேப் பங்குகள்!

‘‘ஊருக்குக் கிளம்புகிறேன். 9 மணிக்கு விமானம். ஒரு மணி நேரத்துக்கு முன்பே நான் ஏர்போர்ட்டில் இருக்க வேண்டும்”  என  நம்மை அவசரப்படுத்தினார் ஷேர்லக். ‘‘டன் பாஸ்...’’ என்றபடி கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

‘‘ஜிஎஸ்டி வந்தால் நிஃப்டி 9000 புள்ளிகள் என்று கடந்த வாரம் சொன்னீர்களே, அது நடக்கவில்லையே!’’ என்றோம்.

‘‘ஐரோப்பிய சந்தை நிலைமைகள் வேறு பக்கம் திசை திரும்பியதால், இங்கே ஜிஎஸ்டி வந்தும் நம் சந்தை மேல்நோக்கி செல்ல முடியாமல் போய்விட்டது.  தவிர, ஜிஎஸ்டி 2017 ஏப்ரல் வாக்கில்தான் அமலுக்கு வருகிறது. இதன் பலன் முழுமையாக தெரிய எப்படியும் குறைந்தது ஒன்றரை ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்பதால் சந்தையில் பெரிய உற்சாகம் காணப்படவில்லை.

என்றாலும் இன்று (வெள்ளிக்கிழமை) நிஃப்டி 132 புள்ளிகள் உயர்ந்து, கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது. பணவீக்கம் நீண்ட காலத்தில் 4 சதவிகிதமாக இருக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயம் செய்திருப்பது, தடை யின்றி வரும் வெளிநாட்டு முதலீடு, நன்கு பெய்த பருவமழை, இவற்றோடு ஜிஎஸ்டியும் சேர்ந்து ஒரே நாளில் சந்தையை சதமடிக்க வைத்தது. வரும் வாரத்தில் உலக அளவில் பெரிய நெகட்டிவ் செய்திகள் வந்தாலொழிய நம் சந்தையில் சிறு இறக்கம் வந்தாலும் மேல் நோக்கி செல்லவே நிறைய வாய்ப்பு இருக்கிறது’’ என்றார் ஷேர்லக்.

‘‘ஜிஎஸ்டி அமலுக்கு வந்தாலும் எந்தெந்த துறைகள், நிறுவனங் களுக்கு சாதகம், பாதகம்?’’ என்று கேட்டோம்.

‘‘லாஜிஸ்டிக்ஸ், பிளைவுட்ஸ், சானிட்டரிவேர், டைல்ஸ் போன்ற துறைகளில் அமைப்பு ரீதியான நிறுவனங்கள் குறைவாக இருப்பதால், இந்த துறை சார்ந்த பட்டியலிடப்பட்ட நிறுவனங் கள் அதிக லாபம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏசிசி, ஆசியன் பெயின்ட்ஸ், எக்ஸைட், ேஹவெல்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப், மாருதி சுஸூகி, பிடிலிட்டி, பிவிஆர், ஷாப்பர்ஸ் ஸ்டாப் போன்ற நிறுவனங்களுக்கு  ஜிஎஸ்டி பாசிடிவ்வாக இருக்கும். பார்தி ஏர்டெல், ஐடியா செல்லூலர், ஐடிசி போன்ற நிறுவனங்களுக்கு பாதகம் என்றே சொல்லலாம்” என்று விளக்கம் தந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்