டிரேடர்களே உஷார் - 19

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.ரோல்ஓவர் நல்லதா, கெட்டதா?

“தங்கம் விலை ஏறுமா, இறங்குமா?”

“ஏறும்.”

“எவ்வளவு ஏறும்?”

“கிராமுக்கு ரூ.100 ஏறும்.”

“எவ்வளவு நாளுக்குள்ள ஏறும்?”

“அது சொல்ல முடியாது, ஆனா ஏறும்.”

நல்லசிவம், தனது நண்பர் மணிகண்டனிடம் கேள்வி கேட்டுக் குடைந்து கொண்டு இருந்தார். மணிகண்டனும் பொறுமையாகப் பதில் சொல்லிக்கொண்டு இருந்தார்.

நல்லசிவத்துக்கு இது ஓர் அருமையான வாய்ப்பாகப் பட்டது. இதைச் சரியாகப் பயன்படுத்தி எப்படியாவது நல்ல லாபம் பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்தார். கோல்டு மெகா லாட் வாங்கி லாபம் பார்க்கலாம். ஒரு மெகா லாட்  1000 கிராம். ஒரு கிராமுக்கு ரூ.100 லாபம் கிடைத்தால், 1000 கிராமுக்கு ஒரு லட்சம் கிடைக்கும். நல்லசிவத்துக்கு இந்த லாபத்தை நினைத்தாலே கிளுகிளுப்பாக இருந்தது. 

“சொல்லுங்க மணி, அப்ப நான் கமாடிட்டி மார்க்கெட்ல கோல்டு ஒரு லாட் வாங்கட்டுமா?”

“கண்டிப்பா வாங்குங்க.  நான் சொன்னா தப்பாது.”

நல்லசிவம், ஒரு ஆட்டோ மொபைல் ஸ்பேர்பார்ட்ஸ் வியாபாரி. பஜார்ல 10 வருஷமா கடை போட்டு வியாபாரம் செய்து வருகிறார். பிசினஸ் நன்றாகவே போய்க் கொண்டு இருந்தது. ஆனால், இரண்டு மாதத்துக்குமுன், எதிரிலேயே இன் னொரு ஆட்டோமொபைல் ஸ்பேர்பார்ட்ஸ் கடை வர,  அதிலிருந்து போட்டி அதிகமாகி வியாபாரம் கொஞ்சம் சரிந்தது.

மணிகண்டன், நல்லசிவனின் ஆப்த நண்பர். அவ்வப்போது அவர் கடைக்கு வந்து, கொஞ்சம் நேரம் பேசிட்டு போவார். ஒரு நாள் நல்லசிவம், மணிகண் டனிடம் பேசிக் கொண்டிருந்த போது இந்த கமாடிட்டி டிரேடிங் பற்றிச் சொன்னார். ‘‘அப்படியே சைடுல பண்ணிட்டு வாங்க. பிக்அப் ஆச்சின்னா, அப்படியே அதுக்கு மாறிடலாம்’’ என்றார். 

அதிலிருந்து நல்லசிவத்துக்கு கமாடிட்டி டிரேடிங் செய்யலாமா, வேண்டாமா என்று ஒரே குழப்பம். இப்போது கமாடிட்டி டிரேடிங் செய்ய முடிவெடுத்து, புரோக்கர் ஆபிஸுக்கு போன் செய்து,  ரமேஷிடம் பேசினார்.

“ரமேஷ் சார், கோல்டு மெகா  10 கிராம் இப்ப என்ன விலை?” (கமாடிட்டி சந்தையில் மெகா கோல்டு விலையானது 10 கிராம் என்ற எடைக்குதான் வியாபாரம் ஆகும்.)

‘‘ஆகஸ்ட் கான்ட்ராக்ட் ரூ.31,000. அக்டோபர் கான்ட்ராக்ட் ரூ.31,400. எந்த மாசத்து கான்ட்ராக்ட் நீங்க வாங்கப் போறீங்க?’’ என்று கேட்டார் ரமேஷ்.

(ஃப்யூச்சர்ஸ் வியாபாரத்தில் தற்போதைய மாத கான்ட்ராக்ட் விலையைவிட, அடுத்து வரும் மாதங்களுடைய கான்ட்ராக்ட் விலை கூடுதலாக இருக்கும். இந்த இடைவெளி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இதை காஸ்ட் ஆஃப் கேரி என்பார்கள்!)

ஒரு நிமிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் குழம்பிப் போனார் நல்லசிவம். என்றாலும் ஏதோ ஒரு அசட்டுத் துணிச்சலில் ஆகஸ்ட் மாத கான்ட்ராக்ட்டையே வாங்கச் சொன்னார்.

“ஓகே சார். வாங்கியாச்சி. ஒரு லாட் கோல்டு மெகா ரூ.31,000-க்கு வாங்கியாச்சி.”

நன்றி சொல்லிவிட்டு போனை வைத்த நல்லசிவத்தின் மனதில்  குறுகுறுப்பு தொற்றிக்கொண்டது. உடனே மணிகண்டனுக்கு போன் செய்தார்.  

“மணி, கோல்டு மெகா ஒரு லாட் வாங்கிட்டேன்.”

“குட். எந்த மாச கான்ட்ராக்ட்டை வாங்கினீங்க..?”

“ஆகஸ்ட் மாத கான்ட்ராக்ட்...”

“அப்படியா? ஏன், அக்டோபர் மாத கான்ட்ராக்ட்டை வாங்கி இருக்கலாமே?”

“அய்யய்யோ, தப்பு பண்ணிடேனா? அப்படின்னா, கோல்டு விலை ஆகஸ்ட் மாசத்துல ஏறாதா?”

“ஏறும்... ஏறும்... அதில ஒண்ணும் சந்தேகம் இல்லை. ஒருவேளை விலை ஏறுவது கொஞ்சம் தள்ளி போச்சுன்னா...? அதுக்குதான் அடுத்த மாச கான்ட்ராக்ட்டை வாங்கி இருக்கலாம்னு சொன்னேன்.”

“அப்ப ஆகஸ்ட் மாசத்து கான்ட்ராக்ட்டை வித்துட்டு அக்டோபர் மாச கான்ட்ராக்ட்டை வாங்கிடவா?’’  பதைபதைத்துப் போய் கேட்டார் நல்லசிவம்.

“அதெல்லாம் வேணாம்.   ஒருவேளை விலை ஏறலேன்னா ரோல்ஓவர் பண்ணிக்கலாம்.”

“ரோல்ஓவரா... அப்படின்னா?”

“அதான்பா, ஆகஸ்ட் மாச கான்ட்ராக்ட் முடியும்போது கோல்டு விலை ஏறலைன்னா, அந்த கான்ட்ராக்ட்டை வித்துட்டு, அடுத்து இருக்கக்கூடிய அக்டோபர் மாச கான்ட் ராக்ட்டை வாங்கிக்கலாம்.”

இதைக் கேட்ட நல்லசிவத்துக்கு, மனசுக்கு நிம்மதியாக இருந்தது.  ராத்திரி 10 மணி. கடையை மூடுவதற்காக சாமான்களை எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பித்தார். கடையை மூடும் போது இப்ப கோல்டு விலை என்னவாயிருக்கும் என்று நினைத்து புரோக்கர் ஆபீசுக்கு போன் செய்தார்.
“இப்ப கோல்ட் மெகா விலை என்ன?”

“சார், இப்ப ஆகஸ்ட் கான்ட்ராக்ட் ரூ.31,050 சார்.”

“ரமேஷ். நான் இந்த டிரேடை கேரி பண்றேன். ஏற்கெனவே தேவையான மார்ஜின் அளவு மார்ஜின் பணம் கட்டி இருக்கேன். விலை ரூ.32,000 வரும்போது வித்திடணும். நீங்க ஆர்டர் போட்டு வைங்க. எப்ப ரூ.32,000-ஐ தொட்டாலும் வித்திட்டு எனக்கு கன்ஃபார்ம் பண்ணுங்க’’ என்று சொல்லிவிட்டு, நல்லசிவம் கடையை மூடினார்.

நல்லசிவம், தன் கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வெளியூருக்கு போனார். வேலைப் பளுவில் கோல்டு விலை கேட்க மறந்தார். இரண்டு நாட்கள் முடிந்து கடை சாமான்களை வாங்கிட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது அவர் செல்போன் அடித்தது. எடுத்துப் பார்த்தார்.  புரோக்கர் ஆபீசில் இருந்து போன் வந்தது.

“சொல்லுங்க ரமேஷ்.”

“சார், மார்ஜின் ஷாட் ஆவுது சார்.”

“ஏற்கெனவேதான் முழுப் பணமும் கட்டி இருக்கேனே!” என்றார் நல்லசிவம்.

“ஆமாம் சார். இப்ப கோல்டு ரூ.200 இறங்கிடுச்சு. இப்ப விலை ரூ.30,800-ல இருக்கு. அதனால ரூ.20,000 மார்ஜின் ஷாட் ஆவுது. பணம் கட்டலைன்னா, பொசிஷனை குளோஸ் பண்ணச் சொல்லி ஹெட் ஆபிஸ்ல சொல்லி இருக்காங்க சார்.”

நல்லசிவம், பதறிவிட்டார். “ரமேஷ், அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க. நான் உடனே ஃபண்ட் டிரான்ஸ்பர் பண்ண ஏற்பாடு பண்றேன். மறுநாள் காலையில ஊருக்கு வந்தவுடன், முதல் வேலையாக ஆன்லைன்ல புரோக்கர் அக்கவுன்ட்டுக்கு ரூ.20,000 பணம் டிரான்ஸ்ஃபர் செய்தார்.
நல்லசிவம் மனதில் கொஞ்சம் கவலை தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது. நண்பர் மணிகண்டனுக்கு போன் போட்டார். விஷயத்தை கவலையுடன் விளக்கினார்.

“கவலைபடாதீங்க நல்லசிவம். இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. டக்குன்னு திரும்ப வந்துடும். அதுவும் இல்லாம எக்ஸ்பைரிக்கு இன்னும் 10 நாள் இருக்கு.”

நல்லசிவத்துக்கு சுருக் என்றது. “எக்ஸ்பைரிக்கு இன்னும் 10 நாள்தான் இருக்கா? அதுக்குள்ள ஏறலைன்னா?”

“அதான் ஏற்கெனவே சொன்னேனே. ரோல்ஓவர் பண்ணிக்கலாம்.”
 
நல்லசிவம் கொஞ்சம் மனதை தேற்றிக்கொண்டு தன் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அப்பப்ப புரோக்கர் ஆபீசுக்கு போன் பண்ணி விலையை மட்டும் கேட்டார். ஒருநாள் ரூ.100 ஏறி இருக்கும். இன்னொரு நாள் ரூ.100 இறங்கி இருக்கும். திடீரென்று ஒரு நாள், மீண்டும் டீலர் ரமேஷ் போன் செய்தார்.

“சார், கோல்டு விலை இன்னும் ரூ.200 இறங்கிருக்கு. இன்னும் ரூ.20,000 மார்ஜின் கட்டணும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்