Zero to Hero 2.0 - 13

சாதிக்கும் பிசினஸ்மேன்கள்!23 ஆயிரம் கிராமங்கள்... 12 லட்சம் ஏழைப் பெண்கள்..!‘கிராம விடியல்’ தேவராஜின் வெற்றிப் பயணம்ஜெ.சரவணன்

சாதாரண குடும்பத்தில் பிறந்து, எந்த முதலீடும் இல்லாமல், லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி இருக்கிறார் கிராம விடியல் மைக்ரோ ஃபைனான்ஸ் என்னும் சிறு கடன் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக வளர்த்தெடுத்த தேவராஜ். அவர் தனது வெற்றிக் கதையை அவரே சொன்னார். 

“என் சொந்த ஊர் திண்டிவனம். என் அப்பா, தொழிற்பள்ளி ஆசிரியர்.திண்டிவனத்தில் பள்ளிப் படிப்பை முடித்த நான் செயின்ட் ஜோசப் காலேஜ் திருச்சியில் இயற்பியல் இளநிலை படிப்பு படித்தேன்.  கல்லூரியில் எங்களைப் பொது சேவைக்காக அழைத்துச் செல்வார்கள். அதில் நானும் ஆர்வமுடன் கலந்துகொண்டு வறட்சி, வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சேவைகளைச் செய்தேன்.  பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழகத் தில் எம்.ஏ, எம்.எட் படிப்பும் படித்தேன்.

ஆசிரியர் படிப்பு படித்திருந்தாலும் மக்களுக்குச் சேவை செய்வதில் இருந்த ஆர்வத்தினால் கல்லூரிப் படிப்பு முடித்தபிறகு, டாக்டர் மேரி ஜான் மற்றும் நாங்கள் நண்பர் கள் பத்து பேர் சேர்ந்து திருக்கோவிலூர் பக்கத்தில் உள்ள முகையூரில் ஏசிடி என்கிற தொண்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து சுற்றியுள்ள கிராமத்துப் பிள்ளைகளுக்குப் பாடத்தைத் தாண்டிய கல்வி, விளையாட்டு போன்றவற்றைக் கற்றுக் கொடுத்து வந்தோம். மேலும், பெண்கள் சுய உதவிக் குழுக்களை அமைப்பது, விழிப்பு உணர்வுக் கல்வியைத் தருவது, மழைநீர் சேகரிப்பு என பல விஷயங்களைச் செய்து வந்தோம். 

வாழ்க்கையை மாற்றிய கனடா பயணம்!

1985-ம் ஆண்டு கனடாவில், செயின்ட் ஃபிரான்சிஸ் சேவியர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கோடி இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட்டில் சமூக வளர்ச்சிப் பணிகள் குறித்த முதுநிலை படிப்புப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. உலகின் பல நாடுகளிலிருந்து என்ஜிஓ-களைச் சேர்ந்த பலர் அங்கு வந்து பயிற்சி பெற்றார்கள். அவர்களது அனுபவப் பகிர்வு களும், என்ஜிஓ பற்றிய விசால மான பார்வையும் என் எதிர்கால வாழ்க்கையைத் திட்டமிட உதவியாக இருந்தது.

ஆசா ட்ரஸ்ட் உதயம்!

1986-ல் திருச்சிக்கு அருகில் உள்ள மருங்காபுரி கிராமத்தில் ஆசா என்ற பெயரில் ட்ரஸ்ட் ஒன்றை தொடங்கினேன். இதன் மூலம் சமூக வளர்ச்சிப் பணி களைத் தொடர்ந்து செய்து வந்தேன். அப்போது  எங்களிடம் வேலை செய்துவந்த கிராமத்து பெண்களுக்கு  கூலி வழங்குவோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்