மக்களின் மனசாட்சியை பிரதமர் கவனிப்பாரா?

ஹலோ வாசகர்களே..!

ன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி பேசும் பேச்சு எது பற்றியதாக இருந்தாலும், அது எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும். நகர்ப்புறங்களில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ள அவர், இந்த ஒரு காரணத்தினாலேயே நம் நாட்டில் தொழில் முதலீடு பெரிய அளவில் வராமலே இருப்பதாகவும், திறமைசாலிகள் வேறு வழி இல்லாமல் வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதாகவும், உற்பத்தி குறைந்து, நம் முன்னேற்றம் தடைபடுவதாகவும் மனம் குமைந்திருக்கிறார். 

சமீபத்தில் பெங்களூருவில் பெய்த மழையில் ஐடி நிறுவனங்கள் வெள்ளக் காட்டில் சிக்கித் தவித்ததை மனதில் வைத்தே அவர் இப்படி பேசியிருக்க வேண்டும். பெங்களூரு மட்டுமல்ல, ஒவ்வொரு மழைக் காலத்திலும் மும்பை சில நாட்களாவது முடங்கிவிடுகிறது. கடந்த ஆண்டு பெய்த பெரு மழையில் சென்னை நகரமே தத்தளித்ததை நினைத்து, இந்த ஆண்டும் அப்படி ஒரு அபாயம் வந்துவிடுமோ என்று அஞ்சுகின்றனர் சென்னை மக்கள்.

ஒரு நகரம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து எந்த உள்கட்டமைப்புத் திட்டமும் நம்மிடம் இல்லை என்பதே இதற்குக் காரணம். நகர்ப்புறங்களில் புதிய சாலை அமைக்கும்போது மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும் என்பதைவிட, கான்ட்ராக்டர்களுக்கும் அரசியல்வாதி களுக்கும் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதைப் பார்க்கிறார்கள். புதிய சாலை அமைத்த சில நாட்களிலேயே பொதுப் பணித் துறை, குடிநீர் வடிகால் துறை,  தொலைபேசித் துறை என பல துறைகள் கபளீகரம் செய்ய ஆரம்பித்துவிடுகின்றன.  இதனால் ஒவ்வோர் ஆண்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் மக்களின் வரிப் பணம் வீணாகிறது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்