ஹெல்த் இன்ஷூரன்ஸ்... 5 முக்கிய மாற்றங்கள்!

ந.ஆசிபா பாத்திமா பாவா

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் சில முக்கிய திருத்தங்களை இந்திய இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) அண்மையில்  செய்துள்ளது. இதில்   ஐந்து  முக்கியமான விஷயங்கள் உள்ளன. அந்த ஐந்து விஷயங்கள் என்னென்ன...?  

1. கடனுக்கும் இனி கவரேஜ்!

ஒருவர் வாங்கிய கடனுக்கும் கவரேஜ் கிடைக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டங்கள் அதிக பிரபலமாக வாய்ப்புள்ளது. இந்த பாலிசி குரூப் இன்ஷூரன்ஸ் அடிப்படையில் வழங்கப்படும். 

புதிய விதிமுறையின்படி, ஒரு ஆண்டாக இருந்த பாலிசி காலம் அதிகபட்சமாக ஐந்து ஆண்டு களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பாலிசியை ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு நிறுவனங் களும் வழங்கலாம். இந்த பாலிசி யில், பாலிசிதாரர் உடல்நல பாதிப்பால் கடனை திரும்பக் கட்ட முடியவில்லை எனில்,  இன்ஷூரன்ஸ் நிறுவனம் அந்தக் கடனை திரும்பக் கட்டும்.தற்போது ஒருவர் வாங்கும் கடனுக்கு இணையாக ஆயுள் காப்பீடு பாலிசி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பாலிசிகளில் பாலிசிதாரர் மரணமடைந்தால், கட்டப்படாமல் மீதமிருக்கும்   கடனை இன்ஷூரன்ஸ் நிறுவனம் செலுத்திவிடும். அதாவது, கடனுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் கவரேஜ் கிடைக்கும்போது, உடல் நலப் பாதிப்பால் பாலிசிதாரர் கடனை கட்ட முடியவில்லை எனில்  இன்ஷூரன்ஸ் நிறுவனம் கட்டும். 

பர்சனல் லோன், கார் கடன், வீட்டுக் கடன் வாங்கும்போது இந்த பாலிசியை எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலிசிகள் இனிமேல்தான் விற்பனைக்கு  வரவேண்டும். அப்படி வரும்போதுதான் முழுமையான விவரங்கள் தெரியவரும்.

2. ஆயுள் காப்பீடு மெடிக்ளெய்ம் பாலிசிகளை வழங்க முடியாது!

தற்போது ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும்  அனைத்து இன்டெம்னிட்டி பாலிசிகளும் இனி நிறுத்தப்படும். ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் அடுத்துவரும் மூன்று மாதங் களுக்குள் இதை செய்து முடிக்க வேண்டும். ஏற்கெனவே எடுக்கப் பட்ட பாலிசிகள், பாலிசிக் காலம் முடியும் வரை தொடரும்.

3. பாலிசிதாரர்களுக்கு சலுகைகள்!

புதிய விதிமுறைகளின்படி, இளம் வயதில் ஹெல்த் இன்ஷுரன்ஸ் பாலிசி  எடுப்பவர் களுக்கு பிரீமியத்தில் சலுகைகள் வழங்கப்படும். இந்தச் சலுகை குறித்த விவரங்களை விளம்பரங் களிலும், ஆவணங்களிலும் குறிப்பிட வேண்டும். இந்த முறையின் கீழ், புதிதாக பாலிசி எடுப்பவர் அதிகம் பிரீமியத் தொகையைச் செலுத்த வேண்டி வரும். ஆனால், அதே வயதுடைய, ஏற்கெனவே பாலிசி எடுத்து தொடர்ந்து புதிப்பித்து வருபவர் குறைந்த பிரீமியத்தைச் செலுத்தி வருவார். தற்போது, ஒருவரின் வயது அடிப்படையிலேயே, பிரீமியம்  நிர்ணயிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
 
4. மாதிரித் திட்டங்கள் அறிமுகம்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இனி புதுமையான  பாலிசிகளை அறிமுகப்படுத்த முடியும். ஒன்று முதல் ஐந்து ஆண்டு காலம் வரையுள்ள காப்பீடுகளை, குளோஸ்டு எண்ட் திட்டங்களாக வழங்கலாம். இதன் வெற்றியைப் பொறுத்து அது வழக்கமான திட்டமாகக் கொண்டு வரப்படும். புதிய விதிமுறைகளின்படி, மருத்துவக் காப்பீடானது ஒருவரின் ஆயுள் முழுக்க  நீட்டிக்கப்படலாம்.

5.புள்ளிவிவரங்களில் தெளிவு! 

ஐஆர்டிஏஐ-ன் புதிய விதி முறைகளின்படி, ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வெளியிடும் புள்ளிவிவரங்களை இனி குழப்பம் இல்லாமல் வெளியிட வேண்டும். குறிப்பாக, க்ளெய்ம் விகிதம் குறித்த விவரங் களை பிரிவு வாரியாக தெளிவாக வெளியிட வேண்டும். மேலும், இந்த விவரங்களில் அதிக வெளிப் படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது. 

இந்த மாற்றங்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் துறையில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் எனலாம்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்