வங்கியில் டீமேட் கணக்கைத் தொடங்குவது சரியா?

கேள்வி-பதில்

? நான் டிரேடிங்குக்கு புதியவன். நான் புதிதாக டீமேட் கணக்கைத் தொடங்க வேண்டும். புரோக்கர் நிறுவனத்தில் தொடங்குவது நல்லதா அல்லது வங்கியில் தொடங்குவது நல்லதா?

வினித்,

எம்.எஸ்.ஓ.அண்ணாமலை. ஷேர் புரோக்கர்,சேலம்.

“தாங்கள் டிரேடிங் செய்யும் பங்குத் தரகரிடம் டெபாசிட்டரி வசதி இருந்தால், அவரிடமே டீமேட் கணக்கை வைத்துக்கொள்வது நல்லது. இல்லையெனில் டெபாசிட்டரி வசதி இருக்கிற மற்றொரு தரகரிடம் டீமேட் கணக்குத் தொடங்கலாம். டீமேட் கணக்குக்கு பவர் ஆஃப் அட்டர்னி கேட்டால், மிகுந்த கண்காணிப்புடன் பார்த்துக்கொள்ளவும். வங்கிகளில் பங்குச் சந்தை கணக்குகளை கையாள எல்லாக் கிளைகளிலும் முழுமையான வசதிகள் இருக்கும் என்று சொல்ல முடியாது. எல்லா வசதிகளும் இருக்கும்பட்சத்தில் தொடங்கலாம். வசதிகள் இல்லை எனில், நமக்கு வேண்டிய நேரத்தில் சேவை கிடைப் பதில் சிரமம் ஏற்படும்.”

? கமாடிட்டி சந்தைக்குள் நுழைவது எப்படி? அதற்கான அடிப்படை செயல் முறைகளை விளக்கவும்.

சோனை முத்து,

க.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட், ரூபிடெஸ்க் கன்சல்டன்சி.

“கமாடிட்டி வணிகம் என்பது பங்கு வணிகத்தில் ஃப்யூச்சர்ஸ் டிரேடிங் முறையில் வர்த்தகமாவதை போன்றது. கமாடிட்டி சந்தையில் 200-க்கும் அதிகமான பொருட்கள் வர்த்தகம் ஆகின்றன. நாம் அதிகம் பயன்படுத்தும்  பல பொருட்கள் வணிகத்தில் உள்ளன.

 கமாடிட்டி சந்தையில் முக்கியமாக உலோகங்கள், எரிசக்தி, வேளாண் சம்பந்தப்பட்ட பொருட்கள்  வர்த்தகம் ஆகின்றன. இவற்றின் வரத்து மற்றும் உற்பத்தி போன்ற பல்வேறு விஷயங் களால் உடனுக்குடன் அதிகப்படியான ஏற்றமும் இறக்கமும் ஏற்படும். எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் கமாடிட்டி வர்த்தகத்தில் ஈடுபடுவது அவசியம். 

எம்சிஎக்ஸ் சந்தையில் உறுப்பினராக இருக்கும் ஒரு புரோக்கரிடம் கமாடிட்டி அக்கவுன்ட்டை முதலில் தொடங்கிக் கொள்ளுங்கள். பங்கு வணிகத்தில்  டீமேட் கணக்கைத் தொடங்குவது போன்றே இதற்கும் பான் கார்டு, வீட்டு முகவரிச் சான்று, வங்கிக் கணக்கு சான்று தேவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்