வளர்ச்சியா... வீழ்ச்சியா..? கோவை ரியல் எஸ்டேட் இன்றைய நிலவரம்

ச.ஜெ.ரவி

பொதுவாகவே அனைத்துத் தரப்பினரும் மிகவும் விரும்பும்  இடமாக இருக்கிறது கோயம்புத்தூர்.  வீடோ, மனையோ கோயம்புத்தூர் புறநகரில் வாங்கி விட வேண்டும் என்பது பலரின் ஆசை. தங்களது ஓய்வுக்காலத்தை நல்ல நிலையில், நிம்மதியாக கழிக்க வேண்டும் என நினைக்கும் சீனியர் சிட்டிசன்கள் தேர்வு செய்யும் இடங்களில் கோவை முக்கிய நகரமாக இருக்கிறது.

ஆனால், கடந்த சில ஆண்டு களாகவே கோயமுத்தூர் ரியல் எஸ்டேட் நிலவரம் வளர்ச்சியைச் சந்திக்கவில்லை. மாறாக, வீழ்ச்சியை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் டெவலப்பர்கள் சிலரிடம் பேசினோம்.

“தமிழகம் முழுக்க ரியல் எஸ்டேட் தொழில் கடந்த சில ஆண்டுகளாக மிகப் பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. என்றாலும் கோவையில் பெரிய அளவில் பாதிப்பில்லை. ஆனால், கடந்த ஆண்டு முதல் கோவையிலும் ரியல் எஸ்டேட் தொழில் சரிவைச் சந்தித்திருக்கிறது. கிட்டத்தட்ட 25% அளவுக்கு பதிவுத் துறை அலுவலகத்தில் பத்திரப்பதிவு குறைந்திருக்கிறது.

மக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டதுடன், வீடு மற்றும் மனைகளின் விலையும் அதிகரித்துவிட்டது இதற்கு முக்கிய காரணம். இதுபோக, ரியல் எஸ்டேட் துறையில் மிக அதிகமாக இருக்கும் கைடுலைன் வேல்யூ குளறுபடிகள் உள்ளிட்ட காரணங்களும் உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்