கேட்ஜெட்ஸ்

கார்த்தி

ரெட்மி  3s பிரைம் (Redmi 3s prime)

மாதத்துக்கு பத்து மொபைல்கள் சந்தையில் அறிமுகம் ஆவதால், குறைவான பட்ஜெட்டில் ஏதேனும் ஒரு மொபைலை வாங்கி பயன்படுத்திவிட்டு, மீண்டும் அடுத்த மொபைலை தேடிச் செல்வது இன்றைக்கு பலருக்கும் வாடிக்கையாகிவிட்டது. இதைக் கருத்தில் கொண்டு மொபைல் நிறுவனங்களும், பட்ஜெட் விலை மொபைல்களை பெருமளவில் களம் இறக்கி வருகின்றன.

ஷியோமி நிறுவனம் ரூ.10,000-க்கும் குறைவான பட்ஜெட்டில் பல மொபைல் போன்களை  வெளியிட்டு வருகிறது. 5 இன்ச் டிஸ்பிளே, கோல்கம் ஸ்நேப்டிரேகன் 430 ஆக்டோகோர் 1.4GHz பிராசஸர், 1280* 720 ரெசல்யூசன், என பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் இதன் அம்சங்களும்  இருக்கிறது. 128 ஜிபி வரை கூடுதல் கார்டு மூலம் மெமரியை அதிகரித்துக் கொள்ளலாம். டூயல் சிம் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், இதில் இரண்டு சிம் அல்லது ஒரு சிம், ஒரு மெமரி கார்டுதான் பயன்படுத்த முடியும். 4100mAh பேட்டரி திறனுடன் இந்த மொபைல் இயங்குகிறது. இரண்டு நாட்கள் இதன் பேட்டரி தாங்கும் திறன் பெற்றது என ஷியோமி நிறுவனம் உறுதி அளிக்கிறது.

13 மெகா பிக்ஸல் ரியர் கேமராவும், 5 மெகா பிக்ஸல் ஃபிரன்ட் கேமராவும் தரப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 6.0.1 இயங்குதளத்தில் இந்த மொபைல் இயங்குகிறது. ரெட்மி 3S, ரெட்மி 3S பிரைம் மொபைல்களுக்குள் பெரிய வித்தியாசம் இல்லை. 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரியுடன் இருப்பது ரெட்மி 3S. 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, ஃபிங்கர் பிரின்ட் சென்சாருடன் இருப்பது ரெட்மி 3S பிரைம். வித்தியாசம் அவ்வளவே! 

பிளஸ்

நல்ல டிசைன்
ஃபிங்கர் பிரின்ட் சென்சார்
பேட்டரி திறன்

மைனஸ்

கேமரா பயன்பாட்டின்போது சூடாகிறது
தனியான மெமரி கார்டு ஸ்லாட் இல்லை

விலை :
ரெட்மி 3S ரூ.6,999, ரெட்மி  3S பிரைம் ரூ.8,999

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்