முத்ரா கடன்கள்... தொழில் வளர்ச்சிக்கு வழி வகுக்கிறதா?

டாக்டர் அனந்த நாகேஸ்வரன், சர்வதேச பொருளாதார நிபுணர்.நாணயம் விகடன் பார்வை

டந்த ஏப்ரல் மாத இறுதியில், இந்தியத் தொழில் துறையின் 2013-14-ம் நிதி ஆண்டுக்கான ஆய்வறிக்கையை (http://bit.ly/IndustriesSurvey2013-14) அரசு வெளியிட்டது. இது மிக விரிவான மற்றும் தொழில் துறையின் மிக முக்கிய ஆதாரமான அறிக்கை ஆகும்.

இந்த அறிக்கை சில கேள்விகளை எழுப்பினாலும் தனிப்பட்ட துறைகளை வளர்ப்பதற்கான கொள்கை உருவாக்கத்தில் விடுபட்ட விஷயங்கள் குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது.

வேலைவாய்ப்பு = மூலதனம் ​+ உற்பத்தி!

2013-14 தொழில் துறை ஆய்வறிக்கையின் பகுதி 7-ல் உள்ள முதல் பத்தியை கூர்ந்து கவனித்தோமானால், அறிக்கை எண் 11ஏ மற்றும் 11பி ஆகியவற்றில் அதிக தொழில் துறை நிறுவனங்கள் குறைவான வேலைவாய்ப்பையும் குறைந்த தொழில் துறை நிறுவனங்கள் மட்டுமே அதிக வேலைவாய்ப்பு களையும் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது, மொத்தமுள்ள 1,85,690 தொழில் துறை நிறுவனங்களில் 1,34,944 நிறுவனங்கள் 50-க்கும் குறைவான பணியாளர்களைக் கொண்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொழில் துறை நிறுவனங்களைப் பொறுத்தவரை, நிரந்தர மூலதனம், மொத்த உற்பத்தி, நிகர மதிப்பு ஆகியவை முக்கிய காரணிகளாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. குறைந்த வேலைவாய்ப்புகளைக் கொண்டுள்ள தொழில் துறை நிறுவனங்கள் மொத்த தொழில் துறையில் 72.68% உள்ளன. ஆனால், இவை 7.06 சதவிகித நிரந்தர மூலதனத்தை மட்டுமே முழுமையாகப் பயன்படுத்துகின்றன என்பதுடன், 15.62 சதவிகித வேலைவாய்ப்புகளை மட்டுமே கொண்டுள்ள இந்த நிறுவனங்களின் மொத்த உற்பத்தி 11.18%. இவை ஈட்டும் நிகர வருமானத்தின் மதிப்பு மொத்த தேசிய உற்பத்தித் துறையின் வருமானத்தில் 7.71%.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்