கம்பெனி ஸ்கேன்: நியூலேண்ட் லேபாரட்டரீஸ்!

(NSE Symbol: NEULANDLAB)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ஹைதராபாத் நகரில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் பார்மெச்சூட்டிகல் நிறுவனம் நியூலேண்ட் லேபாரட்டரீஸ் லிமிடெட். 32  ஆண்டுகளுக்கு முன்னால் நிறுவப்பட்ட நிறுவனம் இது.  75-க்கும் மேலான மருந்து வகைகளை கண்டறிந்திருப்பது, 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் வியாபாரம், 400-க்கும் மேற்பட்ட ரெகுலேட்டரி பைலிங்குகள் என பல்வேறு விஷயங்களிலும் முன்னணியில் இருக்கிறது இந்த நிறுவனம்.

பார்மா  துறையில் ஆக்டிவ்  பார்மெச்சூட்டிகல் இன்க்ரிடியன்ட்ஸ் முதல் மருந்துத் தயாரிப்பில் தேவைப்படும் வேதியியல் பொருட்கள் தயாரிப்பில் எல்லா விதமான செயல்பாடு களையும் கொண்டிருக்கும் நிறுவனம் இது.

மருந்து நிறுவனங்களினால் விற்பனை செய்யப்படும் மருந்தில் இருக்கும் உடல்நிலையை சரிசெய்ய அல்லது செயல்பாட்டு நிலையை மாற்றி அமைக்க உதவும் வேதியியல் பொருட்களே ஆக்டிவ் பார்மெச்சூட்டிகல் இன்க்ரிடியன்ட்ஸ் எனப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் முக்கியமான தொழில்,  ஏபிஐ-யை  உற்பத்தி செய்வதாகும். இரண்டாவதாக, இந்த நிறுவனம் ஈடுபடுவது புதிய வேதியியல் செயற்கை சேர்மப் பொருட்களை தருவிப்பதாகும் (அட்வான்ஸ்டு இண்டர்மீடியேட்ஸ்). இந்த வகை மருந்து மற்றும் மருந்துசார் பொருட்களை தயாரிப்ப தற்காக அமெரிக்க மருந்து தர நிர்ணய நிறுவனமான எஃப்டிஏ அங்கீகாரம் பெற்ற உற்பத்தி வசதிகளை தன்வசத்தே கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

முப்பது வருடங்களுக்கும் மேலாக இந்த  நிறுவனம் நடைமுறையில் இருப்பதிலேயே தலைசிறந்த உற்பத்தி முறைகளை பின்பற்றி தனது உற்பத்திகளை செய்து வருவது குறிப்பிடத்தக்க  விஷயமாகும். இந்த நிறுவனத்தின் தனிச் சிறப்பே மிகவும் உயரிய ரக வேதியியல் செயல்முறைகளைக் கொண்டும், தர நிர்ணய நிறுவனங்களின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டும் உற்பத்தி செய்வதே ஆகும்.

உலக அளவில் இருக்கும் பல்வேறு பெரிய மருந்து நிறுவனங்களுக்கு ஜெனரிக் மருந்து வகைகளை உற்பத்தி செய்து சப்ளை செய்துவருகிறது. மேலும், மருந்து நிறுவனங்களுக்குத் தேவைப்படும் கஸ்டம் மேனுஃபேக்சரிங் சொல்யூஷன் பிரிவிலும் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்