பிரச்னைகளைத் தாண்டி இந்தியப் பங்குச் சந்தைகள் வளரும்!

‘ஏஞ்சல் புரோக்கிங்’ வைபவ் அக்ரவால் சிறப்புப் பேட்டிமு.சா.கெளதமன்

ஜிஎஸ்டி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறிய பிறகு நிஃப்டி 9000 புள்ளிகளைத் தொடும் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அது நடக்குமா என்கிற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. ஏறிக் கொண்டே இருந்த சந்தை இப்போது ஏற்ற, இறக்கத்துடன் இருக்கிறது. இந்த நிலையில், சந்தையின் அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது உள்பட பல்வேறு கேள்விகளை ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் ரிசர்ச் ஹெட், வைபவ் அக்ரவாலிடம் கேட்டோம். அவர் நமக்களித்த பேட்டி இதோ:

கூடிய விரைவில் சந்தை  மீண்டும் உச்சத்தைத் தொடுமா?


“தற்போதைக்கு சந்தையின் போக்கு பாசிட்டிவ்வாகவே இருக்கிறது. தென்மேற்குப் பருவமழை நன்றாகப் பெய்வது, பாண்டுகளுக்கான  யீல்டு குறைந்திருப்பது போன்றவை  சந்தையின் ஏற்றத்துக்கு வலு சேர்க்கிறது. அதேபோல், நுகர்வு மற்றும் தேவை அதிகரித்திருப் பதும் இந்தியச் சந்தைகள் இன்னும் பாசிட்டிவ்வாக போகும் என்பதைக் காட்டுகிறது. தற்போதைய நிலையில், நல்ல நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தைப் பார்க்கலாம். அவ்வளவு பங்குகள் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையில் இருக்கிறது.”

தற்போது சந்தையை எது வழி நடத்திக் கொண்டிருக்கிறது ?


“தற்போது சந்தையை நுகர் வோர்தான்  நிர்ணயிக்கிறார்கள். ஏழாவது ஊதியக் குழு காரண மாக அதிகப்படியாக புழங்க இருக்கும் பணம், கிராமப்புறப் பகுதிகளில் மக்களுக்கு அதிகரித் திருக்கும் வருமானம், கடந்த ஒரு வருடமாக குறைந்து கொண்டே வந்திருக்கும் கடனுக்கான வங்கி வட்டி விகிதங்கள்  போன்ற காரணிகள்  இந்தியாவின் மொத்த நுகர்வையும் அதிகரித் திருக்கிறது.

இரண்டாவதாக, அரசு செய்து வரும் வளர்ச்சிக்கான நடவடிக் கைகளால் பாதுகாப்புத் துறை, நீர் பாசனத் துறை, உள்கட்ட மைப்புத் துறை போன்றவை பெரிய அளவில் மீண்டும் ஆர்டர்களை எடுக்கத் தொடங்கி இருப்பதை பார்க்க முடிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்