நிஃப்டி எதிர்பார்ப்புகள்: பலம் ஆகும் சப்போர்ட் லெவல்!

டிரேடர்களே உஷார்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித முடிவுகள் சந்தையின் அடுத்த நகர்வைத் தீர்மானிக்கும் என்றும் டெக்னிக்கல் செட் அப்பில் பெரிய மாறுதல்கள் ஏதுமில்லை என்றும் 8515 – 8275 என்ற சப்போர்ட்களைக்கொண்டே சந்தை இருக்கிறது என்றும் வால்யூம் குறைய ஆரம்பித்தால் வியாபாரத்தினை நிறுத்திக்கொள்வது நல்லது என்றும் சொல்லியிருந்தோம்.

இரண்டு நாட்கள் இறக்கத்தையும் மூன்று நாட்கள் ஏற்றத்தையும் சந்தித்த நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக 11 புள்ளிகள் இறக்கத்தில் முடிவடைந்தது. நான்கு டிரேடிங் தினங்களைக் கொண்ட வாரத்தினுள் நுழைய இருக்கிறோம்.

நிஃப்டியின் டெக்னிக்கல் செட் அப்பில் பெரிய மாற்றம் ஏதும் வந்துவிடவில்லை. எனவே, செய்திகளும் நிகழ்வுகளுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்.

டெக்னிக்கலாக பெரியதொரு இறக்கம் வருவதற்கான வாய்ப்பு சற்று குறைந்துகொண்டே போகிறது. எனவே, ஷார்ட் சைட் வியாபாரத்தையும், ஓவர்நைட் பொசிஷன் களையும் தவிர்த்து ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸுடன் கூடிய சிறிய எண்ணிக்கையிலான லாங் சைட் வியாபாரங்களுக்காகவே சந்தையை ட்ராக் செய்யலாம்.

8720 லெவலைத் தாண்டி வால்யூமுடன் மல்ட்டிப்பிள் குளோஸிங் நடந்தால், 8850 வரையிலும் சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

இறக்கம் வந்தாலுமே பல சப்போர்ட் லெவல்கள் தொடர்ந்து பலம் ஆகிக் கொண்டே இருப்பதால், தற்போதைக்கு பெரிய பாதிப்புகள் வந்துவிடும் வாய்ப்பு  நெகட்டிவ் செய்திகள் வந்தால் மட்டுமே இருக்கிறது எனலாம்.

கவனத்துடன் வியாபாரம் செய்யவேண்டிய கால கட்டம் இது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.

விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் – விலைகள் மற்றும் வால்யூம்கள் 12-08-16 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்