இறங்குமுகத்தில் பங்குச் சந்தை!

சி.சரவணன்

ஜிஎஸ்டி மசோதா நிறைவேறிய அன்று நிஃப்டி புள்ளிகள் 8728-க்கு உயர்ந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று 8672 புள்ளிகளில் நிறைவுப் பெற்றது. கடந்த சில மாதங்களாக வேகமான வளர்ச்சியைக் கண்டுவந்த நிஃப்டி இப்போது கொஞ்சம் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது. அடுத்து வரும் வாரங்களில் சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என மும்பையைச் சேர்ந்த ஐடிபிஐ கேப்பிட்டல் தலைவர் (ஈக்விட்டி ரிசர்ச்) ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். தெளிவாக எடுத்துச் சொன்னார்.

‘‘2016 பிப்ரவரி 29 பட்ஜெட் அன்று நிஃப்டி புள்ளிகள் 6825-க்கு இறங்கியது. அதன்பிறகு சந்தை கடந்த 23 வாரங்களில் இல்லாத அளவுக்கு  ஏற்றம் கண்டது. இனியும் சந்தை மேலே செல்லுமா என்பது சந்தேகம்தான். அடுத்த இரு மாதங்களுக்கு சந்தையின் போக்கில் பெரிய ஏற்றமோ, இறக்கமோ இருக்காது. நிஃப்டி புள்ளிகள் 8510 மற்றும் 8750 இடையே ஒரு ரேஞ்ச் பவுண்டில் தான் வர்த்தகமாகும். இந்த இரு மாதக் காலத்தில் சந்தை கொஞ்சம் நெகட்டிவ்-ஆக இருக்கும்.

நிஃப்டி புள்ளிகள் 8510-க்கு கீழே இறங்கினால் அதிகமாக இறங்க வாய்ப்பு இருக்கிறது.      2016-ம் ஆண்டுக்கான ஏற்றம் முடிந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்” என்ற ஏ.கே.பிரபாகர் சற்று நிறுத்தி, மீண்டும் தொடர்ந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்