டிரேடர்களே உஷார் - 20

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.50 லட்சம் ரூபாய் அம்பேல் ஆன கதை!

மணன் புதிதாகத் திருமணம் ஆனவர். மனைவி கற்பகம், நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவர். எனவே, குடும்பத்தின் கஷ்ட நஷ்டம் அறிந்தவர். ரமணன் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்திக்கொண்டு இருந்தார். இந்த வியாபாரத்தில் நல்ல அனுபவம் இருந்ததால்,  மாதம் எப்படியும் ரூ.70,000 - ரூ.80,000 சம்பாதிப்பார்.  

நல்ல வசதியான வாழ்க்கை  வாழ்ந்து வந்தார் ரமணன். கடையில் நேரம் கிடைக்கும் போது டிவி போட்டு பார்ப்பார். அப்போது ஷேர் மார்க்கெட் ஏறியது, ஷேர் வாங்கியவர் களுக்கு  இன்றைக்கு இத்தனை கோடி லாபம் என்று அறிவிப்பாளர் சொல்லும்போது, ரமணன் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. காலம் செல்லச் செல்ல ஷேர் மார்க்கெட் ரமணனையும் பற்றிக் கொண்டது. அது  என்ன ஷேர் மார்க்கெட், அதில்  எப்படி கோடி கோடியாக லாபம் சம்பாதிக்கிறாங்க என்றெல்லாம் யோசிப்பார். அப்போதே அதையும் மறந்துவிடுவார்.

ஆனால், முதல்முறையாக அம்பலவாணனை சந்தித்த போது அவருக்குள் ஷேர் மார்க்கெட் தீ பற்றிக்கொண்டது.

அம்பலவாணன் மெக்கானிக்கல் கடை வைத்திருக்கிறார். எப்போதாவது  வண்டிகள் ரிப்பேருக்கு வரும். ஸ்பேர் பார்ட்ஸ் வாங்க, ரமணன் கடைக்குத்தான் வருவார். அப்படித்தான் இருவருக்கும் பழக்கம்.

அன்று ரமணன் கடைக்கு அம்பலவாணன் வந்தபோது டிவி பார்த்துக்கொண்டு இருந்தார்.  

“சார், நான் சொல்ற சேனலைக் கொஞ்சம் போடுங்க சார்,  ஜிஎஸ்டி பில் பாஸ் ஆயிடுச்சாம். ஷேர் மார்க்கெட் ஏறியிருக்கான்னு பார்ப்போம்?’’ என்றார்.

அம்பலவாணன் கேட்ட சேனலைப் போட்டார் ரமணன்.

“சார், நீங்க ஷேர் மார்க்கெட்ல டிரேட் பண்றீங்களா, எனக்கு அது பத்தி ஒண்ணும் தெரியாது’’ என்றவுடன் உற்சாகமானார் அம்பலவாணன்.

“சார் ரொம்ப சிம்பிள் மேட்டர்.   உங்களுக்கு ஷேர் மார்க்கெட்ல டிரேட் பண்ணனும்னா சொல்லுங்க. நான் உங்களுக்கு அக்கவுன்ட் ஓப்பன் பண்றேன்’’ என்றார்.

ரமணன் ‘உம்’ என்றார். அடுத்த நாளே ரமணனுக்கு ஒரு புரோக்கர் ஆபீஸிலிருந்து அழைத்து வந்தது. டீமேட் கணக்கு தொடங்கத் தேவையான அத்தனை டாக்குமென்ட்டு களிலும் கையெழுத்துப் போட்டார். அத்தனை இடங்களில் கையெழுத்துப் போடும்போது  ரமணனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

சின்னச் சின்னதாக ட்ரேட் செய்ய ஆரம்பித்த ரமணனுக்கு  தினமும் ரூ.200, ரூ.300 என்று லாபம் வரவே அந்த கிக் அவரை நன்கு தொற்றிக்கொண்டது.அம்பலவாணனுக்கு போன் போட்டார்.

“சார், இன்னும் நல்ல லாபம் பார்க்கணும் சார். அதுக்கு வழி சொல்லுங்க?’’ என்று கேட்டார் ரமணன்.

“அப்ப காலைல ஒரு 9.30 – 10.30 மணிக்குள்ள மார்க்கெட் நல்லா மூவ் ஆகும். அப்புறம் சாயந்திரம் 2.30 மணியிலிருந்து 3.30 மணிக்கு நல்லா மூவ் ஆகும்.  அப்ப டிரேட் பண்ணுங்க’’ என்றார்.

ரமணனுக்கும் அது நல்ல விஷயமாகப் பட்டது. அப்படி செய்யத் தொடங்கியதில், முதல் வாரத்தில் அவருக்கு ரூ.1,000 லாபம் கிடைத்தது. பலே,  இப்படியே போன ஒரு பத்து நாள்ல, ஐயாயிரம் போட்டு ஐயாயிரம் எடுத்துடலாம் போல இருக்கே என்று கணக்குப் போட ஆரம்பித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்