கமாடிட்டி டிரேடிங்!

சோ.கார்த்திகேயன்

ந்த வாரம் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் விலைப்போக்கு குறித்து அலைஸ் புளூ நிறுவனத் தின் தலைவர் கே.ராஜேஷ் விளக்குகிறார்.

தங்கம்!

“தங்கம் அக்டோபர் மாத கான்ட்ராக்ட் அதிகபட்சமாக 31,564 ரூபாயும், குறைந்தபட்சமாக 31,270 ரூபாயுமாக கடந்த வாரம் வர்த்தகமானது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்த முடிவுக்காக சந்தை காத்திருந்தது. ஆனால், பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகக் கூறிட அமெரிக்க மத்திய வங்கியும், ஐரோப்பிய மத்திய வங்கியும் வட்டி விகிதத்தில் மாற்றம் மேற்கொள்ளா மல் தள்ளி வைத்துவிட்டன. இதனால் தங்கத்தின் விலை வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். டெக்னிக்கல் சார்ட்படி, தங்கம் ட்ரையாங்கிள் பேட்டன் ஃபார்ம் ஆகி வருகிறது. இதை உடைத்தெறிந்து 31,750 ரூபாயைத் தாண்டினால் வரும் நாட்களில் ரூ.32,000 முதல் 32,175 ரூபாயை அடையும் என்று எதிர்பார்க்கலாம்.

வெள்ளி!

வெள்ளி செப்டம்பர் மாத கான்ட் ராக்ட் அதிகபட்சமாக ரூ.46,809 என்ற நிலையிலும், குறைந்த பட்சமாக ரூ.45,736 என்ற நிலை யிலும் வர்த்தகமானது. அமெரிக்க ஃபெடரல் வங்கி மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி வட்டிவிகிதத்தை உயர்த்துவது குறித்த முடிவினை எடுக்கவில்லை. பொருளாதார மேன்மை அடைந்து வருவதாகத் தெரிவித்துள்ளதால், வெள்ளியின் விலை வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க் கலாம். டெக்னிக்கல் சார்ட்படி, வெள்ளி சப்போர்ட் ரூ.45,733 என்கிற அளவில் இருக்கிறது. இதே சப்போர்ட் நிலையில் இரண்டு மாதங்கள் நீடிக்கும் பட்சத்தில் வரும் நாட்களில் ரூ.47,070 முதல் 47,634 ரூபாயைத் தொடும் என எதிர்பார்க்கலாம்.

கச்சா எண்ணெய்!

கச்சா எண்ணெய் செப்டம்பர் மாத கான்ட்ராக்ட் அதிகபட்சமாக ரூ.3,282 என்ற நிலையிலும், குறைந்தபட்சமாக ரூ.3,065 என்ற நிலையிலும் வர்த்தகமானது. ஒபெக் நாடுகளின் சப்ளை முடக்கம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை கடந்த வாரத்தில் அதிகரித்துக் காணப்பட்டது. இதுமட்டுமின்றி, கடந்த புதன் கிழமை கச்சா எண்ணெய்க் கையிருப்பு குறித்து வெளியான டேட்டாவில் எதிர்பார்த்ததைவிட, மிகவும் குறைந்த அளவிலேயே கையிருப்பு இருப்பதாக டேட்டா வெளியானது.

அத்துடன், கடும் பற்றாக்குறை நிலவி வருவதால் வரும் வாரங்களில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. வீக்லி டெக் னிக்கல் சார்ட்படி, கச்சா எண்ணெய் ஹெட் அண்ட் சோல்டர் பேட்டன் ஃபார்ம் ஆகி வருகிறது. இது விலை மேலும் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கும் பேட்டன் ஆகும். ஆகையால் கச்சா எண்ணெய் விலை வரும் நாட்களில் அதிகரிக் கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.”

இந்த வாரம் அக்ரி கமாடிட்டியில் பாமாயில், மஞ்சள், சீரகம் விலைப்போக்கு எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்