அரசு நிறுவனங்களில் மோடியின் புதிய கலாசாரம்!

ஹலோ வாசகர்களே..!

மது 70-வது சுதந்திர தின விழாவின்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி முக்கியமான விஷயமொன்றை எடுத்துச் சொல்லி இருக்கிறார். ‘‘அரசு நிறுவனங்களில் புதிய கலாசாரத்தைக் கொண்டுவர பாடுபட்டு வருகிறோம். இதன் விளைவாக, நஷ்டத்தில் இயங்கிவந்த ஏர் இந்தியா, பிஎஸ்என்எல் ஆகிய அரசு நிறுவனங்களை லாபத்துக்குக் கொண்டு வந்திருக்கிறோம்’’ என்று சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி.

புதிய கலாசாரம் என்றால் என்ன என்று பிரதமர் தெளிவான விளக்கம் எதுவும் தரவில்லை. என்றாலும், நஷ்டத்திலிருந்து லாபத்துக்கு மாறுகிற மாதிரி நமது செயல்பாட்டினை மாற்றிக் கொள்வதே புதிய கலாசாரம் என பிரதமர் மோடி குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.

அரசு நிறுவனங்கள் சில நன்கு லாபம் சம்பாதித்தாலும், பல நிறுவனங்கள்  நஷ்டத்தில் தான் இயங்குகின்றன. தனியார் பேருந்து நிறுவனங்கள் லாபத்தில் இயங்கும்போது, அரசுப் பேருந்து நிறுவனங்கள் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன. தனியார் கல்வி நிறுவனங்கள் 100% தேர்ச்சிக்காக முயற்சிக்கும்போது, அரசுக் கல்வி நிறுவனங்கள் குறைந்தபட்ச தேர்ச்சிக்குப் போராடுகின்றன. இந்த முரண்பாட்டினைக் களைந்து, நஷ்டத்தில் இருந்து லாபத்துக்குத் திரும்ப வேண்டும் எனில், அரசு நிறுவனங்களில் புதிய கலாசாரம் கட்டாயம் புகுத்தப்பட வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்