சேமிப்புக் கணக்கு வட்டிக்கு வரி விலக்கு உண்டா?

கேள்வி-பதில்

வருமான வரிச் சட்டத்தின் கீழ் வங்கி சேமிப்புக் கணக்குக்கு கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி விலக்கு உண்டா? இதைத் தவிர, எதற்கெல்லாம் வருமான வரி விலக்கு உண்டு என்பதை விளக்கவும்.

ராஜாராம்

ச.ஸ்ரீராம் ரெட்டி, ஆடிட்டர்.

“வருமான வரிச் சட்டப் பிரிவு 80TTA-ன் கீழ் வங்கி சேமிப்புக் கணக்கின் மீதான வட்டிக்கு ரூ.10,000 வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, பிரிவு 80C- ன் கீழ் ஆயுள் காப்பீட்டு பிரீமியம், வீட்டுக் கடன் அசல் தொகை மற்றும் பத்திரப் பதிவு செலவு, குழந்தைகள் கல்விக் கட்டணம், வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு பத்திரம் ஆகியவற்றில் செய்யப்படும் முதலீட்டுக்கு நிதி ஆண்டில் 1,50,000 ரூபாய் வரை வரி விலக்கு தரப்படுகிறது. 

பிரிவு 80D-ன் கீழ் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 25,000 ரூபாய் வரையும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 30,000 ரூபாய் வரையும் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.”

? கோவையில் 1991-ம் ஆண்டில் 1,50,000 ரூபாய்க்கு இடம் ஒன்றினை வாங்கினேன். இப்போது அந்த இடத்தின் மதிப்பு 90 லட்சம் ரூபாய். இந்த இடத்தை ஆகஸ்ட்     2016-ல் விற்றால் எவ்வளவு வரி கட்ட வேண்டியிருக்கும்? வரி சேமிப்புக்காக எந்த விதமான முதலீடுகளை நான் செய்ய வேண்டும்? அதை எந்தத் தேதிக்குள் செய்ய வேண்டும்?

பத்மநாபன்,

ஜி.என்.ஜெயராம், ஆடிட்டர், கார்த்திகேயன் & ஜெயராம் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்ஸ்.

“தாங்கள் ஆகஸ்ட் 2016-ல் விற்கப் போகும் நிலத்தை வாங்கி 25 வருடங்கள் ஆனதால், அந்த விற்பனை மூலம் கிடைக்கும் லாபம் நீண்ட கால மூலதன ஆதாயமாகக் கருதப்படும்.

இந்த ஆதாயத்தைக் கணக்கிட விலைவாசிக் குறியீட்டு அட்டவணை மூலம் கொள்முதல் விலையை நிர்ணயித்து பின்பு அந்த விலையை விற்பனை விலையிலிருந்து கழிக்க வேண் டும். அந்த ஆதாயத்துக்கு 20% வருமான வரி செலுத்தவேண்டும்.

இந்த வரியிலிருந்து விலக்கு பெறுவதற்கு, கிடைக்கும் ஆதாயத்தை மூலதன ஆதாய பாண்டுகளில் (NHAI, REC Bonds)  நிலம் விற்ற தேதியிலிருந்து ஆறு மாதத்துக்கு முதலீடு செய்யலாம்.

அல்லது, நிலம் விற்ற தொகையின்  மூலம் இரண்டு வருடத்துக்குள் வீடு வாங்கலாம் அல்லது மூன்று வருடத்துக்குள் வீடு கட்டலாம்.

இந்தச் சலுகைகளை பெற மேலும் சில நிபந்தனைகள் இருப்பதால், ஒரு பட்டையக் கணக்காளரின் அறிவுரை பெற்று செயல்படுவதே சரியானதாக இருக்கும்.’’

? என்னுடைய வயது 65. மியூச்சுவல் ஃபண்டில் மொத்தமாக 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்யலாம் என்று திட்டமிட்டு இருக்கிறேன். குறைந்தபட்சம் 12% வருமானம் தருகிற நான்கு அல்லது ஐந்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை சொல்லுங்கள்.

ஜெயசந்திரன்,

த.சற்குணன், நிதி ஆலோசகர்.

“நீங்கள் மூத்த குடிமகன் என்பதால், அதிக ரிஸ்க் எடுக்க முடியாது. அதனால், ரிஸ்க் குறைவான 9% - 10%  வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது.

பின்வரும் திட்டங்களில் பிரித்து முதலீடு செய்யவும். பிர்லா சன் லைஃப் டைனமிக் பாண்ட் ஃபண்ட் - குரோத்,கோட்டக் இன்கம் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் - குரோத், ஐசிஐசிஐ பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் - குரோத், எஸ்பிஐ ஈக்விட்டி சேவிங் ஃபண்ட் - குரோத்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்