வசந்த காலம் வருமா..?

ஈரோடு ரியல் எஸ்டேட் இன்றைய நிலவரம்வீ.மாணிக்கவாசகம்

ந்து வருடங்கள் முன்பு தமிழக ரியல் எஸ்டேட்களின் ஹாட் ஸ்பாட்டாக இருந்தது ஈரோடு பகுதிகளை உள்ளடக்கிய கொங்கு மண்டலம்தான். அப்படி இருந்த ரியல் எஸ்டேட் தொழில் இன்று, தலைகீழாக மாறிக் கிடக்கிறது. 

சாதாரணமாக ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் குறிப்பிடும் முதல் வாசகமே, மிக அருகிலிருக்கும் கல்வி நிலையத்தின் பெயர், பேருந்து வசதி போன்றவையே.தமிழகத்தின் முக்கிய மாநகராட்சிகளுள் ஒன்றான ஈரோடும் அதற்கு விதி விலக்கல்ல. நகரத்தின் 10  கிலோ மீட்டர் சுற்றளவில் சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் இருக்கின்றன. அவற்றின் அருகிலேயே தரிசு நிலங்களை மனைகளாக்கி, அதிலேயே வீடு கட்டி மொத்தமாக விலை சொல்லி பிசினஸ் பார்த்த       தெல்லாம் ஒரு காலம். இப்போது  அப்படி எதுவும் இல்லை என்று  புலம்புகிறார்கள் ரியல் எஸ்டேட் பிசினஸ் புள்ளிகள்.    

ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் மோகனிடம் பேசினோம். “முன்பெல்லாம் டவுன் பகுதியில் சென்ட் கணக்குல நிலம் வித்து வாங்கினாங்க. இப்போதெல்லாம் சதுர அடிக்கு வந்துட்டாங்க. அந்த அளவுக்கு விலை ஏறி இருக்கிறது. கூடவே அரசின் கெடுபிடிகள் வேறு. அப்படி தொழில் நடந்த சமயங்களில், சொத்தின் சந்தை மதிப்பைவிட அரசின் கைடுலைன் மதிப்பு குறைவாக இருக்கும். இப்படி கைடுலைன் மதிப்பு குறைவாக இருக்கும்போது, அரசின் கைடுலைன் மதிப்புக்கு ஏற்றவாறு பத்திரம் வாங்கி நிலத்தை கிரயம் செய்தார்கள். அதற்குப் பத்திரப்பதிவு அலுவலகத்திலும் உடந்தையாக இருப்பார்கள்.

இப்போது அரசின் வழிகாட்டி மதிப்பு உயர்ந்து போனதால் நிலம் விற்பவர், வாங்குபவர், இந்தத் தொழில் செய்பவர் என அனைவருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  இதற்குக் காரணம், அரசாங்கம் என்பதைவிட பொதுமக்கள் தான் என்று சொல்வேன்.  காரணம், விலை குறைவான நிலத்தை கூடுதல் விலைக்கு வாங்கியதாக தன் சுய லாபத்துக்காக பத்திரம் செய்தவர் களால்தான் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. சதுர அடி ரூ.1,000 மார்க்கெட் வேல்யூ உள்ள ஒரு இடத்தை ரூ.5,000 கொடுத்து வாங்கியதாக பத்திரப் பதிவு செய்து, அந்த இடத்தின் மதிப்பைக் கூடுதலாக்கினார்கள்.  தனது பணத் தேவைக்கு இந்த இடத்தை அடமானம் வைத்து வங்கிகளில் அதிகக் கடன் பெறும் நோக்கில் இந்த தில்லுமுல்லு வேலையை செய்தார்கள். ஆனால் அதுவே இன்று ரியல் எஸ்டேட் தொழிலுக்கு எதிராகத் திரும்பி விட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்