என்பிஎஸ்: அனைவரையும் கவர்ந்திழுக்க அதிரடி மாற்றங்கள்!

ஜெ.சரவணன்

ரசு ஊழியர்களுக்கு மட்டுமில்லாமல், எல்லோருக்கும் ஓய்வூதியம் என்ற நிலையை கொண்டு வந்ததன் விளைவாக உருவான திட்டம் என்பிஎஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படுகிற  தேசிய ஓய்வூதியத் திட்டம்.

இந்தத் திட்டத்தில் 18 - 60 வயது வரை உள்ளவர்கள் முதலீடு செய்ய முடியும். 2004-க்குப் பிறகு அரசு  வேலையில் சேர்ந்தவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது கட்டாயம். தனியார் நிறுவன ஊழியர்கள் தாங்கள் விரும்பும்பட்சத்தில் இந்தத் திட்டத்தில் தாராளமாக முதலீடு செய்யலாம்.

வங்கிகள், இன்ஷூரன்ஸ் மற்றும் நிதி நிறுவனங்கள், அஞ்சலகங்கள் ஆகியவை மூலம் இந்தத் திட்டத்தில் சேர முடியும்.  இந்தத் திட்டத்தில்  சேர விரும்புகிறவர்கள் ஒரு  நிதி ஆண்டில் குறைந்த பட்சமாக ரூ.6,000 முதலீடு செய்ய வேண்டும் என்ற வரம்பை 1,000 ரூபாயாகக் குறைத் துள்ளது மத்திய அரசாங்கம். 

கடந்த ஜூலை 30-ம் தேதி நிலவரப்படி, இந்தத் திட்டத் தில் மொத்தம் 99.95 லட்சம் பேர் முதலீடு செய்துள்ளனர். முதலீடு செய்யப்பட்டுள்ள மொத்த மதிப்பு  ரூ.1.38 லட்சம் கோடி. சிறு முதலீட்டா ளர்களின் முதலீடு, கடந்த ஒரு வருடத்தில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்