ஸ்டேட் வங்கிகள் இணைப்பு - யாருக்கு சாதகம்

ஜெ.சரவணன்

ந்தியப்  பொதுத் துறை   வங்கிகளில்  பெரிய  வங்கியான  பாரத  ஸ்டேட்  வங்கி   (SBI),  தனது துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் (எஸ்பிடி), ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் (எஸ்பிஎம்),        ஸ்டேட்  பேங்க் ஆஃப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர் (எஸ்பிபிஜெ) மற்றும்  மகளிருக்கு என தொடங்கப்பட்ட மகிளா     வங்கி ஆகியவற்றை இணைக்க ஒப்புதல் தெரிவித்து, அதற்காகத் தயாராகத் தொடங்கி இருக்கிறது. 

இதன் மூலம் எஸ்பிஐ வங்கி நிர்வகிக்கும் சொத்து மதிப்பு    ரூ. 37 லட்சம் கோடியாக உயரும் என்றும், உலகின் டாப் 50 வங்கிகளில் ஒன்றாக எஸ்பிஐ விளங்கும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஜூன் மாதத்தில் எஸ்பிஐ-யுடன் அதன் துணை வங்கிகளை இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன் பிறகு வங்கிகள் இணைப்புக்குத் தேவையான சொத்து மதிப்பிடல், நிதிநிலை அறிக்கை, தகவல் தொழில்நுட்பம், மனித வளம், பங்குப் பிரிப்பு உள்ளிட்ட பல நடைமுறை விஷயங்களில் நிபுணர் குழுக்கள் அமைக்கப் பட்டு தீவிரமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் கடந்த  18-ம் தேதி பிற வங்கிகளை தன்னுடன் இணைத்துக் கொள்ளும் முடிவினை முறைப்படி அறிவித்தது. இந்திய வங்கித் துறையில் இது மிகப் பெரிய இணைப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஸ்டேட் வங்கியுடன் அதன் அனைத்து துணை வங்கிகளும் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத் ஆகிய வங்கிகள் தற்போதைய திட்டத்தில் இடம்பெறவில்லை. இந்த இரண்டு வங்கிகளும் பங்குச் சந்தையில் பட்டியலிடப் படாதவை என்பது குறிப்பிடத் தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்