மீண்டும் சதுரங்க வேட்டை!

செபி கைவிரிப்பு...சோ.கார்த்திகேயன்

‘மோசடித் திட்டங்களைக் கண்காணிப்பது எங்கள் பொறுப்பல்ல; மாநில அரசுகள்தான் கண்காணிக்க வேண்டும்’ என்று இந்திய பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம் (செபி) அண்மையில் அறிவித்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஏழைகளும் சிறு முதலீட்டாளர்களும் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதிக்கும்  பணத்தை மோசடி நிறுவனங்கள் ஏமாற்றுத் திட்டங்களின் மூலம்  கொள்ளையடிப்பது அதிகரித்து வருகிறது.

இந்த ஏமாற்று பொன்ஸி  (Ponzi) திட்டங்களை ஒழிக்க அரசாங்கமும், ஒழுங்குமுறை ஆணையுமான  செபியும் என்ன  நடவடிக்கை எடுத்து வருகிறது  என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

 இதற்குப் பதிலளித்த செபி, ‘பொன்ஸி திட்டங்களை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. இதை மாநில அரசு தான் கண்காணிக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றத்துக்குப் பதிலளித்துள்ளது.

செபியின் இந்த அறிவிப்பு  குறித்து பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பனிடம் கேட்டோம்.

“எல்லா மோசடித் திட்டங் களையுமே செபியால் கண் காணிக்க முடியாது.  பொன்ஸி போன்ற மோசடித் திட்டங்கள் எல்லாம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும்.

ஏதாவது பிரச்னை வந்தால்  ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் என்கிற நம்பிக்கையில் தான் வங்கியில் நாம் பணத்தைப் போட்டுவிட்டு நிம்மதியாக இருக்கிறோம். அதுபோல, சிட் ஃபண்டில் பணத்தைப் போடும்போது பிரச்னை வந்தால் மாநில அரசு பார்த்துக்கொள்ளும் என்கிற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது.

இதுபோல, ஒவ்வொரு முத லீட்டுத் திட்டத்தையும் ஒழுங்கு படுத்தி அதைக் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு அமைப்பு ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், ரிசர்வ் வங்கி, செபி மற்றும் இன்ஷூரன்ஸ் ஒழுங்கு முறை ஆணையம் என இது தொடர்பான பல தரப்பட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து, எது எது, யார் யார் கட்டுப்பாட்டில் வருகிறது என்பது குறித்து தெளிவு படுத்தி அதன்பின் செயல்பட வேண்டும்.

இந்தியா முழுவதும் பலரும் கூட்டாகச் சேர்ந்து முதலீடு செய்யக்கூடிய திட்டங்கள் எல்லாம் செபியின் கட்டுப்பாட் டின் கீழ் வரும். ஆனால், பொன்ஸி போன்ற புற்றீசல் திட்டங்கள் எல்லாம் பரவலாக இருப்பது கிடையாது. பொன்ஸி திட்டங்களில்  சட்டத்தை நம்பிப் பணத்தை முதலீடு செய்வதில்லை; உறவினர்கள், நண்பர்கள் சொல் வதை நம்பியே பணத்தை முதலீடு செய்கின்றனர். கோபுரக் கலசத் தில் இரிடியம், ஈமு கோழி போன்ற பிரச்னைகளை எப்படி செபியால் கண்காணிக்க முடியும்?

இதற்கு எல்லாம் நான் பொறுப்பு எனச் செபி ஒப்புக் கொண்டால் முதலீட்டாளர்கள் கண்டபடி எந்த மோசடித் திட்டத்தில் வேண்டுமானாலும் பணத்தைப் போட்டு இழக்க வாய்ப்புள்ளது. இதனால்தான் செபி, ‘எங்களை நம்பி  பணத்தைப் போடாதீர்கள். எங்களால்   பொன்ஸி திட்டங்களை  எல்லாம் கண்காணிக்க  முடியாது’ என தெளிவுபடுத்தியுள்ளது.

ஆகையால், முதலீட்டாளர்கள் எந்தவொரு திட்டத்தில் முதலீடு செய்யும்போதும் அது செபியின் அனுமதி பெற்றுள்ளதா அல்லது வேறு ஏதாவது அமைப்பிடம் அனுமதி பெற்றுள்ளதா என்பதை ஆராய்ந்து அதன் அடிப்படையில் மட்டுமே முதலீடுகளை மேற் கொள்ள வேண்டும்்” என்றார்.
பொன்ஸி திட்டங்களைக் கண்காணிப்பது குறித்து செபியின் கருத்து பற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் சங்க தலைவர் முத்துக்குமாரிடம் கேட்டோம்.

“நம் நாட்டில் எந்தவொரு ஒழுங்குமுறை ஆணையமாக இருந்தாலும் அவர்களுக்கான உள்கட்டமைப்பு வசதியானது சரியாக இல்லை. செபியின் தென் மண்டல அலுவலகம் சென்னை யில் உள்ளது. சென்னை அலுவலகத்தில் இருந்து கொண்டு தமிழ்நாடு முழுவதும் நடக்கும் குற்றங்களைக் கண்காணிப்பது கடினமான காரியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்