ஃபைனான்ஷியல் ஆப்ஸ்

கார்த்தி

எக்ஸ்பென்ஸ் மேனேஜர்!

பட்ஜெட்டை சரிவரக் கையாளவும், செலவுகள் கையைக் கடிக்காதபடி பார்த்துக்கொள்ளவும்தான் பலருக்கும் ஆலோசனை தேவைப்படுகிறது. எக்ஸ்பென்ஸ் மேனேஜர் என்ற செயலி இதை மிகவும் சிறப்பாகக் கையாள்கிறது. தினசரி, வாரம், மாதம், ஆண்டு என நம் பட்ஜெட்டை நமக்கு
ஏற்றவாறு பட்டியல் போட்டுப் பார்க்க இந்த ஆப்ஸ் பேருதவியாக இருக்கும்.

வரவு செலவுகளை ட்ராக் செய்தல், வரித் தொகையை ட்ராக் செய்தல், கிரெடிட் கார்டு, வங்கி ஸ்டேட்மென்ட் போன்றவற்றை ஒரே கூரையின் கீழ் கொண்டு வருதல் போன்றவற்றில்  இந்தச் செயலி சூப்பராக இயங்குகிறது.அதேபோல், இதில் வரும் ரிப்போர்ட்டுகளை csv, html, pdf, excel என நமக்குத் தேவைப்படும் ஃபார்மெட்டில் மாற்றியும் கொள்ளலாம்.

மொபைலை மாற்றும் போதும் அல்லது வேறு சில பிரச்னைகளின் போதும் இதில் இருக்கும் விவரங்களை கூகுள் டிரைவ், மெமரி கார்டு போன்றவற்றில் தாமாகவே பேக்-அப் செய்யும் வசதியையும் இந்தச் செயலி தருகிறது. ஆக, நமது நிதி நிலை குறித்த விவரங்கள் தொலைந்து விடுமோ என்கிற பயம் இல்லாமல் இதைப் பயன்படுத்தலாம்.

இந்தச் செயலி இணைய இணைப்பு இல்லாத போதும், வேலை செய்யும் என்பது கூடுதல் பிளஸ்.

https://play.google.com/store/apps/details?id=com.expensemanager

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்