அனந்த் நாராயணன்... இ-காமர்ஸின் இளைய தளபதி!

ஜெ.சரவணன்

ராண்டுக்கு முன்பு விற்பனையில் சில சரிவுகளைச் சந்தித்து, அடுத்து எப்படி வளர்வது என்று தெரியாமல் தவித்தது  மிந்த்ரா  நிறுவனம். இந்த நிலையில் மிந்த்ராவின் சி.இ.ஓ-வாக பொறுப்பேற்றார் அனந்த் நாராயணன். கடந்த ஓராண்டு காலத்தில் மிந்த்ராவை மிகப் பெரிய வளர்ச்சி காண வைத்திருக்கிறார். இன்றைக்கு இ-காமர்ஸின் இளைய தளபதி என்கிற அளவுக்குப் புகழப்படுகிறார். யார் இந்த அனந்த் நாராயணன்?

இ-காமர்ஸ் வர்த்தகத்தில் உலக அளவில் அமேசானும் அலிபாபாவும் முன்னணியில் இருந்தாலும், இந்தியாவில் ஃப்ளிப்கார்ட்தான் முன்னிலையில் இருக்கிறது. இந்த நிலையில், ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தொடர்ந்து தனது எல்லைகளை விரிவுபடுத்தி வந்தது. வளர்ந்துவரும் சிறிய இ-காமர்ஸ் நிறுவனங்களை வாங்கத் துடித்தது. சில ஆண்டுகளுக்கு அப்படி வாங்கிய நிறுவனம்தான் மிந்த்ரா.

ஃபேஷன் ஆடைகளை விற்பனை செய்யும் இ-காமர்ஸ் நிறுவனம்தான் மிந்த்ரா. இந்திய இ-காமர்ஸ் துறையில் ஃபேஷனின் பங்கு 1% மட்டுமே. இ-காமர்ஸ் தளங்களில் மற்ற பொருட்கள் அதிவேக விற்பனை ஆகும்போது நவநாகரிக ஆடைகள் மட்டும் மிகக் குறைவாகவே விற்பனை ஆனது. ஃபேஷன் துறையை முற்றிலுமாக தன் பக்கம் இழுத்துக்கொள்ளவே மிந்த்ராவை விலைக்கு வாங்கியது ஃப்ளிப்கார்ட். “நிறுவனத்தை வாங்கினால் மட்டும் போதுமா, அதற்கு ஒரு திறமையான தலைவரை நியமிக்க வேண்டாமா’’ என்று யோசித்தபோது, அனந்த் நாராயணனை மிந்த்ராவின் சி.இ.ஓ-வாக நியமித்தது.

யார் இந்த அனந்த் நாராயணன்?

சென்னையில் பிறந்த அனந்த் நாராயணன் ஒரு இன்ஜினீயர். தனது பால்ய காலத்தை பெங்களூரில் கழித்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில்  பொறியியல் படித்தார். பிறகு, மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் இண்டஸ்ட்ரீஸ் இன்ஜினீயரிங் அண்ட் ஆபரேஷன்ஸ் முதுநிலைப் படிப்பு படித்தார். அவருக்கு முதலில் குமின்ஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.  ஆனால், மனதை மாற்றிக்கொண்டு மெகின்ஸி அண்ட் கோ என்னும் உலகப் புகழ் பெற்ற முன்னணி கன்சல்டன்சி நிறுவனத்தில் சேர்ந்தார்.

15 ஆண்டுகள் மெகின்ஸியில் இருந்தவர், படிப்படியாக பல பொறுப்புகளில் உயர்ந்து, ஜனவரி 2013-ல் அதன் இயக்குநர் ஆனார். மெகின்ஸியில் அவர் சிறப்பாகப் பணியாற்றி வந்தபோதிலும், இன்னும் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்ததால், இ-காமர்ஸ் துறையில் நுழைந்தார். 

மிந்த்ராவின் சக்சஸ் மந்த்ரா!

15 வருடங்கள் கன்சல்டன்ட்டாக வேலை செய்த இவருக்கு மிந்த்ராவில் சேரும் வரை, ஃபேஷன் ஆடைகள் பற்றி எதுவுமே தெரியாது என அவரே சொல்வது ஆச்சரியப்பட வைக்கும் தகவல். என்றாலும் அதுபற்றி வேகமாகக் கற்றுக்கொண்டது அனந்த் நாராயணின் ஸ்பெஷாலிட்டி. இந்தத் துறையில் இருந்த அவரது அனுபவம் வாய்ந்த நண்பர்கள் சிலர் அவருக்குப் பாடம் எடுத்தார்கள். ஃபேஷன் என்பது மிந்த்ராவின் உயிர் மூச்சு என்பதால் இப்போதுகூட ஒரு நாளைக்கு அரை மணி நேரம் ஃபேஷன் பற்றி புதிது புதிதாக கற்று வருகிறார் அனந்த்.

கண்டறிந்த உண்மைகள்!


ஃபேஷன் துறையைப் பற்றி தெரியாத போதிலும், அதன் மீது அலாதியான ஆர்வம் அனந்த்துக்கு இருந்ததுதான் மிந்த்ராவின் வெற்றிக்கு முதல் காரணம். தவிர, இந்திய ஃபேஷன் துறையையும், மக்களின் மனநிலையையும் பரந்த மனப்பான்மையுடன் அலசினார். அதன் மூலம் அவர் சில முக்கியமான விஷயங்களைக்  கண்டறிந்தார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, கோடைக் காலம், குளிர் காலம், மழைக் காலம் என்ற சீஸன் மாறுதலெல்லாம் பெரிதாக இல்லை. பெரும்பாலான பகுதிகளில் எப்போதும்  கோடைக் காலம்தான். சில இடங்களில் மட்டும் கோடையும், பனிக் காலமும் நிலவும். அதனால் சீஸனுக்கு ஏற்ற மாதிரியான ஆடைகள் விற்பனை என்பது இங்கு தோல்வி அடைந்துவிடும்.

மேலும், ஆன்லைன் விற்பனையில் உள்ள பிரச்னைகளைக் களைய தொழில்நுட்ப வழிகளைக் கண்டுபிடிக்க வேண் டிய கட்டாயம் இங்கு உள்ளது. தள்ளுபடிகளை இஷ்டத்துக்கு அள்ளிவிடக் கூடாது என்கிற உண்மைகளைக் கண்டுபிடித்தார்  அனந்த்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்