ரிஸ்க்கை குறைத்து அதிக வருமானம்... மூன்று முதலீட்டு மந்திரங்கள்!

கோவர்தனன்பாபு, Ciicindia.com, நிதி ஆலோசகர்.

ற்ற முதலீடுகளுடன் ஒப்பிடும்போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ரிஸ்க் என்பது கொஞ்சம் குறைவுதான். என்றாலும் அந்த ரிஸ்க்கையும் குறைத்து லாபத்தை அதிகரிப்பதற்கான  மூன்று மந்திரங்கள் உள்ளன. 

அந்த மூன்று மந்திரங்கள் என்னென்ன தெரியுமா? 

*எஸ்ஐபி

*எஸ்டபிள்யூபி

*எஸ்டிபி

இந்த மூன்று மந்திரங்களைப் பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

எஸ்ஐபி (Systematic Investment Plan)

எஸ்ஐபி என்பது சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான். அதாவது, முறையாக தொடர்ந்து சீரான இடைவெளியில் முதலீடு செய்யும் முறை. ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு குறிப்பிட்ட மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து முதலீடு செய்வது. பொதுவாக, பங்குச் சந்தை சார்ந்த எல்லா வகை மியூச்சுவல் பண்ட் திட்டங்களிலும் இந்த எஸ்ஐபி வசதி இருக்கிறது.
   
உதாரணமாக, மாதாமாதம் 10-ம் தேதி, ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்டில் ஒருவர்  ரூ.1,000  முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம்.   ஒருமுறை, காசோலை கொடுத்து இசிஎஸ்-க்கு பதிவு செய்துவிட்டால், அதில் குறிப்பிட்டுள்ள காலத்துக்கு  வங்கிக் கணக்கிலிருந்து டெபிட் செய்து, மியூச்சுவல் ஃபண்ட் கணக்கில் யூனிட்டுகளாக வரவு வைத்துவிடுவார்கள்.  எஸ்ஐபி முதலீட்டினை நீங்கள் மேற்கொண்டு தொடர விரும்பவில்லை எனில், அந்தத் தகவலை முதலீடு செய்துவரும் ஃபண்ட் நிறுவனத்துக்குத் தெரியப்படுத்தினால், அடுத்த மாதத்திலிருந்து நிறுத்திவிடுவார்கள். 

இப்படி முதலீடு செய்யும் தொகையை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக்கொள்ளலாம்.    நாம் செய்த முதலீட்டினை மொத்தமாகவோ, பகுதியாகவோ அல்லது லாபத்தை மட்டுமோ எடுத்துக்கொள்ளலாம். விற்கப் படும், மியூச்சுவல் ஃபண்ட்  யூனிட்களின் மதிப்புக்கான தொகையை, வங்கிக் கணக்கில் வரவு வைப்பார்கள். 

மாத வருமானம் பெறு பவர்களுக்கு இந்த எஸ்ஐபி திட்டம் மிகவும் ஏற்றது.  பங்குச் சந்தை முதலீட்டில் உள்ள ரிஸ்க்கைக் குறைப்பதற்கு இந்த எஸ்ஐபி முதலீடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஒருவர் தன்னுடைய முதலீட்டுத் திறனுக்கேற்பவும் எதிர்காலத் தேவைக்கேற்பவும் எத்தனை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலும் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்யலாம். ஒருவரது  மாத குடும்பச் செலவு, டேர்ம் இன்ஷூரன்ஸ் பிரீமியம், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பி ரீமியம் மற்றும் கடனுக்கான இஎம்ஐ போக மீதமுள்ள தொகையை எஸ்ஐபி மூலம் முதலீடு செய்யலாம்.

அதேபோல, ஒருவர் எத்தனை திட்டங்களில் வேண்டுமானாலும் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்ய லாம். என்றாலும் அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்து திட்டங்களில் பிரித்து முதலீடு செய்வது நல்லது.

ஒருவர் எப்போது வேண்டு மானாலும் எஸ்ஐபி முதலீட்டைத் தொடங்கலாம் என்றாலும்  இளம் வயதிலேயே நீண்ட கால நோக்கில் எஸ்ஐபி  மூலம் முதலீடு செய்யத் தொடங்கிவிடுவது நல்லது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்