கம்பெனி ஸ்கேன்: அசாகி இந்தியா கிளாஸ் லிமிடெட்!

(NSE SYMBOL: ASAHIINDIA)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய  எடுத்துக் கொண்டுள்ள நிறுவனம் கண்ணாடிகளைத் தயாரிக்கும் நிறுவனமான அசாகி இந்தியா கிளாஸ் லிமிடெட். 

ஆட்டொமொபைல்களுக்கான விண்ட்-ஷீல்டு கண்ணாடிகள் தயாரிக்க ஆரம்பித்த இந்த நிறுவனம், இன்றைக்கு பல்வேறுவிதமான கண்ணாடி ரகங்களுக்கான சொல்யூஷன் தரும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. 

1980-களில் மாருதி சுஸூகி நிறுவனமும், ஜப்பானின் அசாகி கிளாஸ் கம்பெனி லிமிடெட், இந்திய லாப்ரூ குடும்பத்தினரும் கூட்டணி அமைத்து ஆரம்பித்ததுதான் இந்த நிறுவனம்.

இன்றைக்கு கார்கள் மற்றும் வாகனங்களுக்கான கண்ணாடிகள் மற்றும் முகப்புக் கண்ணாடிகள்,  கட்டடங்களில் அழகுக்கான கண்ணாடிகள்,    விண்ட் ஷீல்டு மற்றும் கிளாஸ் எக்ஸ்பர்ட் சேவைகளை வழங்குதல்,  4ஜி சொல்யூஷன் எனப்படும் கண்ணாடிகளைத் தேர்வு செய்தலுக்கான ஆலோசனைகளை வழங்குதல், கண்ணாடிகளைத் தேர்ந்தெடுத்துக்கொடுத்தல் மற்றும்  பிராசஸ்களை செய்தல்,  கண்ணாடிகளைச் சேர்த்தல், நிறுவுதல் மற்றும் நிறுவியதற்குப் பிந்தைய சேவைகளை வழங்குதல் ஆகிய நான்கு பெரும் பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது. தவிர, ஏஐஎஸ்வியூஇ எனப்படும் யுபிவிசி கதவுகள் மற்றும் ஜன்னல்களையும் உற்பத்தி செய்து வருகிறது  இந்த நிறுவனம். 

 பல்வேறு வகையான கண்ணாடிகள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாகத் திகழும் இந்த நிறுவனம் 2002-ம் ஆண்டில் ஃப்ளோட் கிளாஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தினை தன்னுடன் இணைத்துக்கொண்டது.

கடந்த நிதியாண்டின் இறுதியில் ஆட்டோமொபைல்களுக்கான அனைத்துவிதமான கண்ணாடிகளுக்கான  விற் பனையில் சந்தையின் மொத்த விற்பனை அளவீட்டில் 74 சதவிகித பங்களிப்பை இந்த நிறுவனம் தக்கவைத்துக் கொண்டுள்ளது  குறிப்பிடத்தக் கதாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்