கோல்டு இடிஃப் டு கோல்டு பாண்ட்: முதலீடுகள் மாற என்ன காரணம்?

ஷியாம் சுந்தர், காமாடிட்டி சந்தை நிபுணர்

காகிதத் தங்கம் என்கிற கோல்டு இடிஎஃப், பத்து ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் அறிமுகமான பிறகு, ஆபரணமாக தங்கத்தை வாங்க விரும்பாதவர்களின் விருப்பமான முதலீடாக மாறியது.

இந்த கோல்டு இடிஎஃப் யூனிட்டுகளை வாங்குவதும், விற்பதும் எளிது; செய்கூலி, சேதாரம் போன்ற செலவுகள் எதுவும் இல்லாமல் இருப்பது போன்ற பாசிட்டிவ் அம்சங் களால் கோல்டு இடிஎஃப்-ல் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.  

கோல்டு இடிஃப் முதலீடு செய்யவோ அல்லது வர்த்தகம் செய்யவோ டீமேட் கணக்கு அவசியம். இதற்கு ஆண்டுக்கு சுமார் ரூ.400 செலவாகும்.

இடிஃப் என்பது, தங்கத்தின் விலை அதிகரிப்பை நேரடியாகப் பிரதிபலிக்கும் என்பதால்,  முதலீட்டாளர்கள் இதை மிகவும் விரும்பினார்கள்.

இப்படி பல நல்ல அம்சங்கள் இருந்தும்,  சமீப காலமாக கோல்டு இடிஎஃப்-ல் இருந்து முதலீடுகள் கணிசமாக வெளியேறின.  நடப்பு 2016-17-ம்  நிதி ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், அதாவது ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் முறையே ரூ.69, ரூ.79, ரூ.80 மற்றும் ரூ.183 கோடி என்ற அளவுக்கு கோல்டு இடிஎஃப் யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டு, முதலீடு வெளியேறி இருக்கிறது.

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. கோல்டு இடிஎஃப் ஃபண்டுகள் கடந்த ஓராண்டில் (2015 ஆகஸ்ட்  - 2016 ஆகஸ்ட்) ஏறக்குறைய 22% லாபம் தந்துள்ளன.

2. மத்திய அரசு புதிதாக அறிமுகம் செய்துள்ள கோல்டு பாண்டுகள். இதுபற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். 

தங்க இறக்குமதியைக் குறைக்க சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு நடவடிக்கைகளில் தங்க சேமிப்புப் பத்திரமும் ஒன்றாகும். தங்க சேமிப்புப் பத்திரங்களை மத்திய அரசாங்கம் அறிமுகம் செய்த போது பலரும் அதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே, இதை முதலீட்டாளர்கள் விரும்பும் வகையில் சில திருத்தங்களை இப்போது செய்துள்ளது மத்திய அரசாங்கம்.

இதுவரை நான்கு முறை இந்த தங்கப் பத்திரங்களை  வெளியிட்டதில், மத்திய அரசுக்கு ரூ.2,292 கோடி கிடைத்துள்ளது. இந்த தங்கப் பத்திரங்களை முதன் முறையாக அறிமுகம் செய்தபோது 62,169 பேர் விண்ணப்பித்தனர். சென்ற  ஜூலை மாதத்தில் நான்காம் முறை தங்கப் பத்திர விற்பனை நடந்தபோது 1.95 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த காலகட்டத்தில்தான் கோல்டு இடிஎஃப் முதலீடுகள் வெளியேறியுள்ளன.

கோல்டு பாண்டுகளில் மத்திய அரசாங்கம் செய்த சில முக்கிய மாற்றங்கள்...    

* குறைந்தபட்ச முதலீடு 2 கிராம் என்று இருந்ததை 1 கிராமாகக் குறைத்தது.

* தனி நபருக்கு 8 வருட முதிர்வின்போது கிடைக்கும் ஆதாயத்தில், இதுவரை இருந்து வந்த வரி விதிப்பு விலக்கப் பட்டுள்ளது.  

* வங்கிகள் மட்டுமில்லாமல், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்ப ரேஷன் மற்றும் குறிப்பிட்ட தபால் நிலையங்களிலும் விநியோ கிக்க முயற்சி எடுக்கப்பட்டி ருக்கிறது.

இந்த கோல்டு பாண்டுகளில் முதலீடு செய்ய   டீமேட் கணக்கு தேவையில்லை என்பது முக்கியமான விஷயம். மேலும்,  முதலீட்டை இடையில் திரும்பப் பெறவேண்டுமானால், நீண்ட கால ஆதாய வரி விதிப்பிலிருந்து விலக்கு பெற அல்லது வரியைக் குறைக்க  விலைவாசி குறியீட்டின் அடிப்படையில் நிவர்த்தி பெற முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்