பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர் குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை.SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ்!

கடந்த வார பரிந்துரையில் நிஃப்டி வலுவாக ஏற்றம் கண்டு 8700 என்கிற லெவல்களைத் தாண்டி வர்த்தகமாகத் தொடங்கினால் வாங்கலாம் என்றும், கீழே இறங்கத் தொடங்கினாலும்  அதை முதலீட்டுக்கான வாய்ப்பாகக் கருதி வாங்கலாம் என்றும் சொல்லி இருந்தோம்.

நிஃப்டி 8700 என்கிற ரெசிஸ்டன்ஸை உடைக்க வில்லை. உடைப்பதற்கு எடுத்த முயற்சிகளும் அதிக நேரத்துக்கு நீடிக்காமலேயே போய்விட்டது.  நிஃப்டி 8600-ஐ நோக்கி கீழிறங்கத் தொடங்கி, இது முதலீட்டுக்கான சந்தர்ப்பம்  என்று வலியுறுத்தியதைப் பார்க்க முடிந்தது.

அதே போல், சந்தை மீண்டும் 8700-ஐ நோக்கி உயரத் தொடங்கி வாரத்தின் இறுதி வர்த்தக நாளில் 8,666.90 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. எனவே, இறங்கும்போது வாங்க வேண்டும் என்று சொன்னது வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. இதைச் செய்திருந்தால் வார இறுதியில் லாபம் பார்த்து இருக்கலாம்.

நிஃப்டிக்கு நேர்மாறாக  பேங்க் நிஃப்டி தன்னுடைய வலுவான ரெசிஸ்டன்ஸான 19000 என்கிற லெவல்களைக் கடந்து ‘வாங்கலாம்’ என்கிற சிக்னலைக் கொடுத்து, லாபமும் கொடுத்து, வாரத்தின் இறுதி நாளில் நிறைவடைந்தது.

நிஃப்டியின் நிலை பெரிதும் மாறாமல் குறிப்பிட்ட விலைக்குள்ளேயே வர்த்தகமாகி வருவதால்,  அடுத்த வாரத்துக்கும்  8700 என்கிற லெவல்களை உடைத்தால் வாங்கத் தொடங்கலாம். அப்படி பிரேக் அவுட் ஆனால் அதிகபட்சமாக 8800 - 8840 புள்ளிகள் வரை உயரலாம். 

பேங்க் நிஃப்டி ஏற்கெனவே ஏற்றத்தில் இருப்பதால் வரும் வாரங்களில் எப்போதெல்லாம், இறங்குகிறதோ அப்போ தெல்லாம் வாங்கலாம். 19100 என்கிற லெவல்களை சப்போர்ட்-ஆக எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை இந்த ஏற்றம் தொடர்ந்தால், அதிகபட்சமாக பேங்க் நிஃப்டி 19750 புள்ளிகள் வரை உயரலாம். இப்போது செய்திகள் பாசிட்டிவ்வாக இருக்கின்றன. எஃப்ஐஐ முதலீடு நன்றாகவே இருக்கிறது. மார்க்கெட் சென்டிமென்டும் நன்றாகவே உள்ளது. எனவே, வரும் வாரத்தில் சந்தையில் காளையின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கணேஷ் எகோஸ்பியர் (GANECOS)

தற்போதைய விலை : ரூ.209.50

வாங்கவும்


கெமிக்கல் துறை சார்ந்த பங்குகளுக்கு தற்போது சந்தையில் ஒரு நல்ல டிமாண்ட் நிலவுகிறது. அப்படிப்பட்ட துறை சார்ந்த ஒரு பங்குதான் இது. நீண்ட காலமாக விலை நிலைபெற்று வர்த்தகமாகி வந்த பங்கின் விலை கடந்த வாரத்தில் பிரேக் அவுட் ஆகி இருக்கிறது. இந்த பிரேக் அவுட்டுக்கு வலுசேர்க்கும் விதத்தில், இந்தப் பங்கு விலை ஏறும் மொமென்டமும் நன்றாக இருக்கிறது.

எனவே, அடுத்த வாரங்களில் இந்த விலை ஏற்றம் இருக்கும். தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். அடுத்த இரண்டு வாரத்தில் பங்கின் விலை  240 ரூபாய்க்கு உயரும் என்று எதிர்பார்க்கலாம். ஸ்டாப் லாஸாக ரூ.195  வைத்துக்கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்