நிஃப்டி எதிர்பார்ப்புகள்: எக்ஸ்பைரிக்குப் பிறகு ட்ரெண்ட் மாறலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ப்போர்ட் லெவல்கள் பலமாகிக் கொண்டே போகிறது என்றும் நிஃப்டியின் டெக்னிக் கல் செட் அப்பில் பெரிய மாற்றம் ஏதும் வந்துவிடவில்லை என்றும் 8720 லெவலைத் தாண்டி வால்யூமுடன் மல்ட்டிப்பிள் குளோஸிங் நடந்தால் 8850 வரையிலும் சென்று திரும்ப வாய்ப்புள்ளது என்றும் சொல்லிய இருந்தோம்.

நான்கே டிரேடிங் தினங் களைக் கொண்டிருந்த சென்ற வாரத்தில் 8696 என்ற உச்சத் தையும் 8600 என்ற குறைந்த அளவையும் எட்டிய நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக ஐந்து புள்ளிகள் இறக்கத்தில் முடிவடைந்தது.

மீண்டும் டெக்னிக்கல் செட் அப்பில் பெரிய மாறுதல்கள் எதுவும் இல்லாமலேயே சந்தை முடிவடைந்துள்ளது. பெரிய அளவிலான டேட்டா வெளியீடுகள் இல்லாத மற்றும் ஆகஸ்ட் மாத எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி தினம் இருக்கிற வாரத்தினுள் நுழைய இருக்கிறோம்.பெரும்பாலும் எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரிக்கு உண்டான மூவ் களே சந்தையில் இருந்துவிடும் வாய்ப்புள்ளது. எக்ஸ்பைரிக்குப் பின்னால் சந்தையில் பெரிய அளவிலான மாற்றங்கள் வந்துவிடுகிற வாய்ப்பு இருப்பதால், வாரத்தின் இறுதியில் ஓவர்நைட் பொசிஷன்களை தவிர்ப்பதே நல்லது எனலாம்.

வீக்னெஸ் கண்ணில் தெரிந்தாலுமே ஷார்ட் சைட் வியாபாரத்தினை தவிர்ப்பதே நல்லது. இடையிடையே டெலிவரி வால்யூமும் டிரேடிங் வால்யூமும் குறைந்தும் அதிகரித்தும் வருவதால், வால்யூம் மீது கவனம் வைத்து வியாபாரம் செய்வது நல்லது. கவனம் தேவை.

வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக் களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.

விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படை யில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் – விலைகள் மற்றும் வால்யூம்கள் 19-08-16 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை.

கடந்த ஐந்து நாட்கள் டிரேடிங்கை வைத்து வரும் வாரத்திற்கு கவனிக்க உகந்த பங்குகள் :  RAIN-41.35, IDFCBANK-53.40, BERGERPAINT-248.30, NTPC-166.75, MGL-557.35, DIVISLAB-1300, RECLTD-236.15, AMBUJACEM-276.45, MARICO-300.85, ONGC-241.60, UPL-645.20.

ரிலேட்டிவ் மொமொன்டம் ஸ்டடிஸ் என்ற அளவீட்டில் பார்த்தால் இந்த பங்குகளை டிரேடிங்குக்கு கவனிக்கலாம்:   HDFC-1369.40, HDFCBANK-1247.10, RAIN-41.35, HEROMOTOCO-3357.75, AXISBANK-588.55, POWERGRID-180.95, IDFCBANK-53.40, OIL-374.95, M&M-1458.95, MRPL-80, KOTAKBANK-778.75.

டிரேடிங் வால்யூம் கணிசமான அளவில் அதிகரித்த ஸ்டாக்குகள் (ஐந்து நாள் அளவீட்டில்)-டிரேடிங்கிற்கு கவனிக்கலாம் : OIL-374.95, MGL-577.35, CHAMBALFERT-66.70, ENGINERSIN-235.80, RICOAUTO-62.85, SURYAROSNI-175.80, MANINFRA-49.45, GSPL-151.60, HEIDELBERG-138.45.

வெள்ளியன்று விலையும் வால்யூமும் அதிகரித்து டிரேடர்களுக்கு சர்ப்ரைஸ் காண்பித்த பங்குகள்: PRAKASH-48.05, OMKARCHEM -164.45, DEEPAKFERT-180.50, CARBORUNIV-281.05, TORNTPOWER-187.25, ELECTCAST-22.40, MERCATOR-50.70, MUKANDLTD-58.20.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்