ஃபண்ட் ஹவுஸ் - 8

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
எல் & டி மியூச்சுவல் ஃபண்ட்ஃபண்ட் நிறுவனங்களைப் பற்றிய பக்கா கைடுசொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

ல் & டி (லார்ஸன் அண்ட் டூப்ரோ – Larsen & Toubro) நம்மில் பலருக்கும் பரிச்சயமான நிறுவனம். கட்டுமானம், உற்பத்தி, இன்ஜினீயரிங், ஃபைனான்ஸ், கப்பல் கட்டுமானம், மெஷினரி தயாரிப்பு, ரியாலி்ட்டி, ஐ.டி என்று பல துறைகளில் நம் நாட்டின் வளர்ச்சியோடு பின்னி பிணைந்துள்ள நிறுவனமாகும். டென்மார்க்கில் இருந்து இந்தியாவுக்கு வந்த இரண்டு இன்ஜினீயர்களால் (ஹென்னிங் ஹோல்க் லார்ஸன் மற்றும் சோரன் கிறிஸ்டியன் டூப்ரோ) துவங்கப்பட்ட நிறுவனமாகும்.

இன்று பெருமளவில் வளர்ந்து, நிஃப்டியில் 4 சதவிகிதத்துக்கும் மேல் வெயிட்டேஜ் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.1,06,000 கோடிக்கும் மேல். முழுக்க முழுக்க தொழில் ரீதியிலான புரஃபஷனல்களால் நிர்வாகம் செய்யப்படும் நிறுவனம் என இதைக் கூறலாம். இந்த நிறுவனத்துக்கு புரமோட்டர்கள் என்று தனியாக யாரும் கிடையாது. இதனுடைய பங்குகள் யாவையும் தனிநபர்கள், வங்கிகள், நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள், இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள், மற்றும் யூ.டி.ஐ போன்றவர்களின் கையில்தான் உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்