கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

இரா.ரூபாவதி

ச்சா எண்ணெய்யின் விலைப்போக்கு மற்றும் தங்கத்தின் விலை வரும் வாரத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்து கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர் கூறுகிறார்.

கச்சா எண்ணெய்!

“கடந்த வியாழன் அன்று ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கலாம் என்ற செய்தியின் அடிப்படையில் சர்வதேச சந்தையில் 3% விலை அதிகரித்தது.

சவுதி அரேபியாவின்  அந்நிய செலாவணி கையிருப்பு 2014-ல் 732 பில்லியன் டாலர்களாக இருந்தது. 2015-ல் 100 பில்லியின் டாலர் அளவுக்கு குறைந்து, தற்போது 630 பில்லியின் டாலர்களாக இருக்கிறது. இதே விலை நீடிக்கும்பட்சத்தில், மாதம் ஒன்றுக்கு 5 முதல் 6 பில்லியன் டாலர் அளவுக்குக் குறைந்து கொண்டே போனால், 2017-ம் ஆண்டு வாக்கில் 479 பில்லியன் டாலர்களாகக் குறைந்துவிடும் என்கிற அச்சம் சவுதிக்கு இருப்பதால், ஒபெக் அல்லாத நாடுகள் – அதாவது அமெரிக்கா, பிரேசில் மற்றும் சீனா போன்றவை உற்பத்தி அளவைக் குறைக்குமா என்று எதிர்பார்க்கிறது.

மற்ற நாடுகளைவிட, சவுதி தனது பொருளாதாரத்தைக் கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணி மூலம் சமாளிக்க முடியும் என்பதால் உடனடியாக உற்பத்திக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாது என்கிற கருத்தும் நிலவுகிறது.

ஆக மொத்தத்தில், சந்தையின் அடிப்படையில் பார்க்கும்போது, சமீபத்திய கச்சா எண்ணெய்யின் விலையேற்றம் என்பது நீண்ட காலம் நீடிக்க வாய்ப்பில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்