ரகுராம் ராஜனின் கேள்விக்கு என்ன பதில்?

ஹலோ வாசகர்களே..!

டந்த வாரத்தில், இந்திரா காந்தி வளர்ச்சி ஆய்வு மையத்தின் 13-வது பட்டமளிப்பு விழாவில் பேசிய மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், நம் நாட்டின் ஜி.டி.பி. வளர்ச்சியைக் கணக்கிடும் முறையைப் பற்றி அடிப்படையான சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார். ‘‘நமது ஜி.டி.பி.யைக் கணக்கிடுவதில் சில பிரச்னைகள் இருக்கவே செய்கிறது. எனவேதான், வளர்ச்சி பற்றி பேசும்போது சில சமயங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியிருக்கிறது’’ என்று சொல்லி இருக்கிறார்.

நம் நாட்டின் ஜி.டி.பி. தற்போது 7.2 சதவிகிதமாக இருக்கிறது. உலக அளவில் எந்தவொரு நாடும் இந்த அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை என்பதை அறியும்போது நமக்கே பெருமையாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்த வளர்ச்சி நிஜம்தானா என்கிற சந்தேகமும் எழுகிறது. காரணம், ஜி.டி.பி.யைக் கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டு (2004-2005-க்குப் பதிலாக 2011-2012), அண்மையில்தான் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மாற்றம் செய்யப்பட்ட பின்புதான் நம் ஜி.டி.பி. கணிசமாக உயர்ந்தது. பழைய முறையின்படி நம் ஜி.டி.பி.யை நாம் கணக்கிட்டால்,  அது வெறும் 5.5 சதவிகிதமாகவே  இருக்கும்.

ரிசர்வ் வங்கியின் கவர்னருக்கு நம் ஜி.டி.பி. வளர்ச்சி குறித்த கேள்வி எழக் காரணம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரிய மாற்றம் எதையும் பார்க்க முடியவில்லையே என்பதால்தான். உதாரணமாக, வங்கிகள் வழங்கும் கடனின் வளர்ச்சி விகிதம் 2015 அக்டோபர் வரையிலான  ஆண்டில் சுமார் 40% குறைந்துள்ளது. நிறுவனங்கள் கடன் கேட்பது குறைந்ததுடன், ஏற்கெனவே வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்