அமெரிக்காவில் பெற்ற சம்பளம்... இந்தியாவில் வரி கட்ட வேண்டுமா?

கேள்வி - பதில்

?பிசினஸ் விசா மூலமாக அமெரிக்காவுக்கு மூன்று மாதங்களுக்கு சென்றிருந்தேன். என் நிறுவனம் எனக்கு தினமும் 70 டாலர் சம்பளமாக தந்தது. நான் அதில் 2,000 டாலரை சேமித்து வைத்துள்ளேன். இந்தப் பணத்துக்கு நான் ஏதாவது வரி கட்ட வேண்டுமா? வரி சேமிப்புக்கான வழிகள் இருந்தால் சொல்லுங்கள்
       
@ - டேவிட்,

என்.பி.இசை அழகன், ஆடிட்டர், இசை அண்ட் கோ.

“நீங்கள் வருமான வரி சட்டத்தின் கீழ் குடியுரிமையாளராக கருதப்படுவீர்கள். அதனால் நீங்கள் அமெரிக்காவில் பெற்ற சம்பளத்தையும், இந்தியாவில் பெற்ற இதர வருமானங்களையும் சேர்த்து உங்களின் மொத்த வருமானமாக கருதப்படும். அந்த வருமானத்திலிருந்து அத்தியாயம் - VI A (Chapter  - VI A) கழிவு போக மீதமுள்ள வருமானத்தில், அடிப்படை வரி விலக்கு போக மீதம் உள்ள தொகைக்கு வருமான வரி அடுக்குகளின்படி வரி கணக்கிடப்படும். அவ்வாறு கணக்கிடப்பட்ட வரியில் இருந்து உங்கள் நிறுவனம் பிடித்தம் செய்த டிடிஎஸ்-ஐ கழித்து மீதம் உள்ள வரியை செலுத்த வேண்டும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்