2016 - எனக்கு என்ன லாபம்?

குறுந்தொடர்-4பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

நல்ல காலம் பொறந்துடுச்சி!

‘‘ஒவ்வொரு முறையும் இப்படித்தான்.. வாயில நுழையாத பேருல எதாவது ஒரு திட்டம்னு சொல்லுவாங்க.  சரி..  ஏதோ நல்லது நடக்கப்  போகுதுன்னு பார்த்தா.... ஒண்ணுத்தையும் காணோம்.. எங்க பொழைப்பு என்னவோ காலம் காலமா அப்படியேதான் இருக்குது...’’

‘‘நெசமா.. மனசைத் தொட்டு சொல்லுங்க.. ‘அப்படியே’வா இருக்கோம்...? ஒரு இருவது வருஷத்துக்கு முன்னே, நம்ம ஊருல ஒரு மாடி வூடாவது இருந்துச்சா...? நாம யாராவது சொந்தமா ஒரு சைக்கிளாவது வச்சிருந்தமா..? வூட்டுல ஒரு ரேடியோ பொட்டி இருந்திச்சா...?

ஒண்ணுமே நடக்கலைன்னு சொன்னா, அது பொய். இன்னமும் நிறைய நடக்க வேண்டி இருக்குன்னு சொல்லு.. ஒத்துக்கறேன்..’’ 

பொருளாதார நடவடிக்கைகளில் இரண்டு மிகப் பெரிய சிக்கல்கள் இருக்கின்றன. தவிர்க்கவே இயலாது. இவை பொதுவாக, எடுத்த எடுப்பில் இனிப்பாக இருப்பதில்லை. முதலில் கசப்பு; பிறகு இனிப்பு.

இப்படித்தான் பல சீர்திருத்த நடவடிக்கைகள் அமைகின்றன. இந்த நியதியைப் புரிந்து கொள்ளாமல், (அல்லது புரிந்துகொள்ளாதது போல்) சிலர் கூச்சல் போட்டு, சீர்திருத்தப் போக்கை சீர்குலைத்து விடுகிறார்கள்.

இதை விடப் பெரிய சிக்கல்,  கால அவகாசம். ஒரு சட்டம் போட்டு, உடனடியாக அல்லது இந்தத் தேதியில் இருந்து  நடைமுறைக்கு வரும் என்று அறிவித்து விட்டால், அதன் பயன் அத்தனை பேருக்கும் உடனடியாகப் போய்ச் சேரும்.

ஆனால், பொருளாதார நடவடிக்கைகளின் பலன், அடித்தட்டு மக்கள் வரை போய்ச் சேர்வதற்கு, (வெகு)காலம் பிடிக்கும். இது பலருக்குப் பிடிப்ப தில்லை. 

இதனால்தான், உலகம் எங்குமே, யார் ஆட்சியில் இருந்து பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வந்தாலுமே, மக்கள் ஆதரவை இழந்து, வெளியேற வேண்டி வருகிறது. அதன் பின்னர் வருகிறவர்கள்தாம், முந்தைய ஆட்சியின் நடவடிக்கைகளால் மக்கள் பெறும் பயனை அறுவடை செய்கின்றனர். இதை, அரசியலாகப் பார்க்க வேண்டாம். இதுதான் நடைமுறை. இந்தக் கால இடைவெளிதான், யாரையுமே பொருளாதார சீர்திருத்தங்களில் ஈடுபடுவதை தயங்கச் செய்கிறது.

இந்த விளக்கத்துக்கு இப்போது என்ன அவசியம்...? நமது பொருளாதார அணுகுமுறையில், கடந்த சில ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப் பட்ட, பல்வேறு மாற்றங்கள் ‘கசப்பு’ பகுதியைத் தாண்டி, இனிப்புப் பகுதிக்குள் நுழைகிற நேரம் இது. அதனால்தான், 2016 செழிப்பான ஆண்டாக அமையும் என்கிற ‘எதிர்பார்ப்பு’ மிகுந்து இருக்கிறது.

ரிசர்வ் வங்கி அறிவித்த வட்டி விகிதக் குறைப்பு, அன்னிய முதலீட்டுக்காக எடுக்கப் பட்ட பகீரதப் பிரயத்தனங்கள், ‘ஜன் தன் யோஜனா’, ‘மேக் இன் இந்தியா’, ‘டிஜிட்டல் இந்தியா’, முந்தைய அரசு கொண்டு வந்த, ‘ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்’... மெல்ல மெல்ல, ‘கடைமடை’ பகுதியை அடைந்து விட்டன; அல்லது, நெருங்கி வந்து கொண்டு இருக்கின்றன.

விவசாயம், தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு, கிராமப்புற வளர்ச்சி போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக போடப்பட்ட திட்டங்களும், ஒதுக்கப்பட்ட நிதிகளும், இன்னும் ஓரிரு மாதங்களில் அவற்றுக்கான பயனீட்டாளர்களை அடையலாம்.

அப்போது பரவலாக பொருளாதார எழுச்சி ஏற்படலாம். இது அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டு வரலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்