உள்கட்டமைப்பை மேம்படுத்தல்... மத்திய அரசின் மாஸ்டர் பிளான்!

சோ.கார்த்திகேயன்

சென்னையிலிருந்து பெங்களூருக்கு ரயிலில் செல்ல தற்போது ஆறு மணி நேரத்துக்கு மேல் ஆகிறது. இதுவே மூன்று மணி நேரத்துக்குள் செல்ல முடியும் என்றால் பல பேருடைய நேரம் மிச்சமாகும் அல்லவா?    இதற்கு வழிவகுக்கும் உள்கட்டமைப்புத் திட்டங்களை அதிவேகமாக செயல்படுத்த மத்திய அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. இதை எப்படி செயல்படுத்துவது, இதில் என்னென்ன சவால்கள் உள்ளன, உள்கட்டமைப்பு திட்டங்களில் பொது - தனியார் கூட்டு (Public Private Partnership) அமைப்பில் சீர்திருத்தங்கள் பற்றி பரிந்துரை செய்ய டாக்டர் விஜய் கேல்கரின் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி தனது சிபாரிசுகளை அண்மையில் மத்திய அரசிடம்  சமர்ப்பித்தது. 

டாக்டர் விஜய் கேல்கர் 2011-ல் ‘பத்ம விபூஷண்’ விருது பெற்றவர். இவர் 13-ஆவது நிதிக் குழுத் தலைவராக இருந்தவர். நிதி அமைச்சரின் ஆலோசகராகவும் இருந்தவர். பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் முக்கியப் பதவிகளை வகித்த இவர், தற்போது தேசிய பொது நிதி மற்றும் கொள்கைக்கான நிறுவனத்தின்  (National Institute of Public Finance and Policy) தலைவராக பதவி வகித்து வருகிறார். கேல்கர் கமிட்டியின் அறிக்கை குறித்து எல் அண்ட் டி ஐடிபிஎல் தலைமை நிதி அதிகாரி டிவி.கார்த்திகேயனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்