கம்பெனி ஸ்கேன்: சத்பவ் இன்ஜினீயரிங் லிமிடெட்!

(NSE SYMBOL: SADBHAV)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய எடுத்துக்   கொண்டுள்ள நிறுவனம் 1988-ம் ஆண்டு கட்டுமானத் துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக உருவாக வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட்ட சத்பவ் இன்ஜினீயரிங் லிமிடெட் ஆகும். இந்த நிறுவனத்தின்  ஆரம்ப காலம்  ஆராவாரமற்ற முறையில் இருந்த போதிலும் சீரான வளர்ச்சியின் காரணமாக 1992-ல் டேர்ன் ஓவரின் அடிப்படையில் இந்த நிறுவனம் ஒரு டீம்டு - பப்ளிக் (Deemed - Public) நிறுவனமாக மாறியது. 1992-93-ல் சுரங்கப் பணியில் ஈடுபட ஆரம்பித்த இந்த நிறுவனம், குஜராத் இண்டஸ்ட்ரியல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் வட்சன் என்ற நிலக்கரி சுரங்கத்தில் தனது பணியை ஆரம்பித்தது.

2001-ல் ஒரு பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக தன்னை மாற்றிக்கொண்டது. படிப்படியாக பல்வேறு துறைகளிலும் கால்பதித்த இந்த நிறுவனம், 2005-06 முதல் பில்ட் - ஆப்ரேட் - டிரான்ஸ்ஃபர் என்ற வகையில் பல்வேறு வகையான நெடுஞ்சாலைகளை அமைத்தல் மற்றும் விரிவாக்கத்துக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டது. 2006-ல்  என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ-ல் பட்டியலிடப்பட்டது இந்த நிறுவனம்.

தொழில்கள் என்னென்ன?

இந்த நிறுவனம் கட்டுமானம் மற்றும் வளர்ச்சிப் பணிகள் என்ற இரண்டு பெரும் பிரிவில் செயல்பட்டு வருகிறது. கட்டுமானப் பிரிவில் சாலைகள் அமைத்தல், மின்சார உற்பத்தி நிலையங்கள், சிமென்ட் மற்றும் ஸ்டீல் ஆலைகளுக்கான சுரங்கங்கள் அமைத்தல் மற்றும் பாசன வசதிகள் அதிகரிப்பதற்கு உதவும் அணைகள் மற்றும் கால்வாய்கள் அமைத்தல் போன்ற மூன்று துறைகளில் ஈடுபட்டுள்ளது.

வளர்ச்சிப் பணிகள் பிரிவில் பில்ட் - ஆப்ரேட் - டிரான்ஸ்ஃபர்  வகையில் சாலைகள் விரிவாக்கம் பலவற்றையும் செய்துவந்துள்ளது  ஏறக்குறைய 3,738 லேன் கிலோ மீட்டர்கள் அளவிலான சாலைகளை அமைத்துள்ளது. பாசனத்துக்கான வாய்க்கால்கள் கட்டுமானத்தில் ஏறத்தாழ 300 கிலோ மீட்டர் கால்வாய்களை கட்டி முடித்தும், சுரங்கத் தொழிலில் சுமார் 300 மில்லியன் கியூபிக் மீட்டர் அளவிலான சுரங்கங்களைக் கையாண்டு வருகிறது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்