ஷேர்லக்: வேகமாக தரையிறங்கும் இண்டிகோ!

வெள்ளிக்கிழமை மாலை ஷேர்லக் நம்மை சந்திக்க   வந்தபோது, நாணயம் விகடனின் முதல் ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்கிளேவ் நிகழ்ச்சிக் கான கடைசி கட்டப் பணி ஜரூராக நடந்து கொண்டிருந்தது. ‘‘இப்போது நீர் தொடங்கி இருக்கும் இந்த கான்கிளேவ் ஒவ்வொரு ஆண்டும் நடக்க வாழ்த்துகள்’’ என்று வாழ்த்திவிட்டு, செய்திகளை  சொல்ல ஆரம்பித்தார்.

‘‘கடந்த வாரம் முழுக்கவே சென்செக்ஸ் ஏற்றத்திலேயே இருந்தது. நெகட்டிவ் செய்திகள் ஏதும் வராததினால் நிஃப்டி 141  புள்ளிகள் உயர்ந்தது. கடந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தில் சந்தை வேகமாக இறங்கியபோது நிஃப்டி 7200 புள்ளிகள் என்கிற அளவுக்கு இறங்கிவிடலாம் என்கிற எதிர்பார்ப்பில் ஃப்யூச்சர் சந்தையில் பல கரடிகள் ‘ஷார்ட்’ போனார்கள். ஆனால், 7300-க்கு கீழ் பெரிய அளவில் இறங்காமல் மீண்டும் சந்தை வேகமாக உயர ஆரம்பித்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத கரடிகள் கான்ட்ராக்ட்டை கவர் செய்ய துரிதமாகக் களமிறங்க, சந்தை ஒரே தாவலில் உயர்ந்ததுதான் மிச்சம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்