இறக்கத்தில் கச்சா எண்ணெய்... ஏற்றத்துக்கு வாய்ப்புள்ள ஆயில் & கேஸ் பங்குகள்!

சி.சரவணன்

லகப் பொருளாதாரம் மற்றும் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கிறது கச்சா எண்ணெய். இதன் விலை ஒரு பீப்பாய் 2014 ஜூன் மாதத்தில் 105 டாலராக இருந்தது. இது இப்போது 32 டாலர் அளவுக்கு இறங்கி இருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகள் பெருமளவில் பணத்தை மிச்சப்படுத்தி, லாபம் அடைந்துள்ளன.

தனிநபர்களுக்கான எரிபொருள் செலவு பெரிய அளவில் குறையவில்லை என்றாலும் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சியால் லாபம் அடையும் நிறுவனப் பங்குகள் எவை என ஐடிபிஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைமை அனலிஸ்ட் (ஹெட் ரிசர்ச்) ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம்.

‘‘இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது என்பதால் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி நம் நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகவும் நன்மை செய்யக்கூடிய விஷயமாக இருக்கிறது. கச்சா எண்ணெய்யின் விலை இறக்கத்தால், ஆயில் அண்ட் கேஸ் நிறுவனங்கள் மற்றும் இவற்றின் தயாரிப்புகளை பயன்படுத்தும் நிறுவனங்களின் மூலப்பொருள் செலவு குறைந்து லாபம் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. நாட்டில் பொருளாதார வளர்ச்சி மேம்படும்போது, இந்த நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கும். குறிப்பாக, கச்சா எண்ணெய் விலை குறைவால் ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் அதிக லாபம் அடையும்’’ என்றார்.

கச்சா எண்ணெய் விலை இறக்கத்தால் விலை ஏறுவதற்கு வாய்ப்புள்ள நிறுவனப் பங்குகள் குறித்து புள்ளிவிவரங்களுடன் விளக்கிச் சொன்னார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்