கமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்

இரா.ரூபாவதி

ரு புறம் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. மற்றொரு புறம் தங்கத்தின் விலை உயர ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைப்போக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து அலைஸ்புளூ நிறுவனத்தின் துணைத் தலைவர் கார்த்திகேயன் ராமநாதன் விளக்குகிறார்.

கச்சா எண்ணெய்!

‘‘கச்சா எண்ணெய்யின் விலையானது கடந்த வியாழன் அன்று நடந்த வர்த்தகத்தில் 2% வரை சரிந்தது. மேலும், அமெரிக்க அரசு ஷேல் ஆயில் உற்பத்தியைக் குறைத்துள்ளது. இதனால் விலை அதிகமாக சரியவில்லை. ஒபெக் நாடுகள் உறபத்தியைக் குறைக்க வேண்டும் என வெனிசுலா மற்ற நாடுகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது நிகழ்ந்தால் விலை ஏற்றம் வரலாம். தொடர்ந்து விலை குறையும்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 30 டாலருக்குக் கீழ் சரியும்போது அமெரிக்கா உற்பத்தியை நிறுத்திவிடும் என ஒபெக் நாடுகள் நினைக்கிறது.

கடந்த வாரம் கச்சா எண்ணெய் கையிருப்பு 7.8 மில்லியன் பேரலாக இருந்தது. டெக்னிக்கல் சார்ட்டுகளின்படி பார்த்தால், கச்சா எண்ணெய்யின் விலை அதிகபட்ச இறக்கத்தை ஏற்கெனவே அடைந்து விட்டது. எனவே, இதற்கு மேல் விலை சரிவதற்கான வாய்ப்பு குறைவு. ஒரு பேரல் கச்சா எண்ணெய்  விலையானது ரூ.2,067-க்கு கீழ் சரியும் போதெல்லாம் அதை வாங்குவதற்கான வாய்ப்பாக கருதலாம். கச்சா எண்ணெய்யின் டார்க்கெட் விலை ரூ. 2,345 - 2,385 -2,425 - 2,480 ஆகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்