கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி

ஜெ.சரவணன்

ந்த வாரம் ஏலக்காய் விலைப்போக்கு குறித்து இண்டிட்ரேட் கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டிவ்ஸ் நிறுவனத்தின் மண்டல மேலாளர் முருகேஷ்குமார் விளக்குகிறார்.

ஏலக்காய் (Cardamom)

கடந்த வாரத்தில் முக்கியச் சந்தைகளில் ஏலக்காய் விலை குறைந்து வர்த்தகமானது. ஏனெனில் ஏலக்காய்க்கான தேவை சந்தைகளில் அதிகரிப்பதற்கான எந்த சூழல்களும் ஏற்படாததே முக்கியக் காரணம். தவிர, ஏற்றுமதி ஆர்டர்களும் சொல்லிக்கொள்ளும்படி அதிகரிக்காததால் விலை குறைவு தடுக்க முடியாததாக இருக்கிறது.

ஏலக்காய் விளைச்சல் எதிர்பார்த்த அளவு இந்த வருடம் இருக்காது என்பதால், சந்தையில் இனிவரும் நாட்களில் புதிய ஏலக்காய் வரத்து குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏலக்காய் விலை குறைவது ஓரளவு கட்டுக்குள் இருக்கும்.

ஆனால், கிடங்குகளில் தேக்கத்தில் உள்ள ஏலக்காய் இருப்பை விநியோகிக்க வேண்டிய கட்டாயத்தில் வியாபாரிகள் இருக்கிறார்கள். ஏலக்காய்க்கான உள்நாட்டு ஆர்டர்களும், ஏற்றுமதி ஆர்டர்களும் அதிகரிக்காத நிலையில் வியாபாரமாகாத ஏலக்காய் இருப்பு தேக்கமடைந்து தரமும் குறைந்துவிடுகிறது. இதனால் பெரும்பாலான வர்த்தகர்கள் ஏலக்காய் வர்த்தகத்தில் முதலீடு செய்ய விருப்பமில்லாமல் வெளியேறுகின்றனர். பிப்ரவரி மாத ஏலக்காய் கான்ட்ராக்ட் 2.56% குறைந்து, ஒரு கிலோ ஏலக்காய் ரூ.693 என்ற நிலையில் வர்த்தகமானது.

இந்த நிலையில் சந்தையில் ஏலக்காய்க்கான தேவை அதிகரிக்காத பட்சத்தில், ஏலக்காய் வரத்து குறைவாகவே இருந்தாலும்கூட வரும் வாரத்திலும் விலை குறைந்தே வர்த்தகமாகும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்