தேயும் தொழில் வளர்ச்சிதான் அரசின் சாதனையா?

ஹலோ வாசகர்களே..!

நாணயம் விகடன் நடத்திய ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவ்-ல் பேசிய முக்கிய பேச்சாளர்கள் ஒரு விஷயத்தை அழுத்தமாக எடுத்துச் சொன்னார்கள். நம் நாடு நிஜமான முன்னேற்றத்தை அடையத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுக்கவில்லை என்பதுதான் அந்த விஷயம். இதே கருத்தைத்தான் டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவும் சில நாட்களுக்கு முன்பு சொல்லி இருக்கிறார்.

‘‘பிரதமர் மோடி தந்த வாக்குறுதிகளை மட்டும் நம்பி இந்தியாவில் முதலீடு செய்யலாமா அல்லது தொழில் செய்வதற்கான நிலைமை நம் நாட்டில் உண்மையிலேயே மாறி இருக்கிறதா என்பதை வெளிநாட்டு தொழில் நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் ஆராய்ந்து பார்க்கும்போதுதான் உண்மையான சோதனை ஆரம்பமாகிறது’’ என்று சொல்லி இருக்கிறார் ரத்தன் டாடா. நம் நாட்டில் தொழில் செய்வதற்கான நிலைமை கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரிய அளவில் முன்னேற்றம் காணவில்லை என்பதையே ரத்தன் டாடா தனது சூசகமான பேச்சின் மூலம் எடுத்துச் சொல்லி இருக்கிறார். ரத்தனுக்கு மட்டுமல்ல, தொழில் துறை வட்டாரத்தைச் சேர்ந்த பலரது கருத்தும் ஏறக்குறைய இதுதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்