வருமான வரி நோட்டீஸ்... சகோதரி கொடுத்த பணத்துக்கு வரி கட்டணுமா?

கேள்வி - பதில்

?இதுவரை நான் வருமான வரி கட்டியதில்லை. பான் கார்டு வைத்துள்ளேன். வருமானவரி அலுவலகத்தில் இருந்து ஒரு நோட்டீஸ் வந்தது. அதில் 2012/13-ல் எனது வங்கிக் கணக்கில் இரண்டு லட்சம் ரூபாய் வரவு வந்துள்ளது. அதற்கு வரி கட்டவேண்டும் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது. அந்தப் பணம் எனக்கு ஏற்பட்ட கடனை அடைக்க எனது உடன்பிறந்த சகோதரி கொடுத்தது. இந்த நிலையில் நான் என்ன செய்வது?

@ - அரவிந்த்ராஜ்,

சிஏ.ஜி.என். ஜெயராம். ஆடிட்டர், கார்த்திகேயன் & ஜெயராம் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்ஸ் ,ஈரோடு.

“பான் கார்டு வைத்திருப்பதால் மட்டுமே  வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்தாக வேண்டும் என்று கட்டாயமில்லை. தங்களின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மேல் இருந்தால், வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவேண்டும். வருமான வரி அலுவலகத்தில் இருந்து வந்துள்ள கடிதத்தின்படி, உங்களுக்கு 2012-2013-ம் ஆண்டில் உங்கள் வங்கிக் கணக்கில் வந்துள்ள தொகை சம்பந்தமான தகவல்களை வருமான வரி அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். சேமிப்புக் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் ரொக்கமாக வரவு வைக்கப்பட்டிருந்தால்், அது பற்றிய விவரங்கள் வருமான வரி மத்திய செயலாக்க மையத்துக்கு தெரியப்படுத்தும் இயந்திரநுட்பம் இப்போது செயல்படுத்தப் பட்டிருக்கிறது. அதன் அடிப்படையிலேயே தங்களுக்கு இது தொடர்பாக விளக்கம் கேட்டு வருமான வரி அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்துள்ளது. தங்களுடைய உடன்பிறந்த சகோதரியிடம் இருந்துவந்த தொகைக்கு வருமான வரி சட்டப்பிரிவு 56-ன் கீழ் வரி விலக்கு இருப்பதால், அதற்கு நீங்கள் வரி ஏதும் கட்ட வேண்டியதில்லை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்