தள்ளுபடி விலையில் வங்கிப் பங்குகள்... இப்போது வாங்கினால் லாபமா?

வி.கோபாலகிருஷ்ணன், நிறுவனர், மணி அவென்யூஸ் (Money Avenues)

ரு நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக செயல்படுவது வங்கித் துறைதான். நாட்டின் பொருளாதாரம் செழிக்க தொழில் துறை வளர்ச்சி மிகவும் அவசியம். அந்தத் தொழில் துறை வளருவதற்கு பணம் அல்லது கடன் மிகவும் முக்கியம். அதை தொழில் துறையினருக்கு வழங்குவது வங்கிகள்தான்.வங்கிகளின் இந்தச் சேவைதான் நாட்டின் பொருளாதாரத்துக்கு நாடித்துடிப்பாக விளங்குகிறது.

ஆனால், கடந்த சில வருடங்களாக இந்தியப் பொருளாதாரம் மந்தமான சூழலில் இருந்ததன் காரணமாக அதன் பிரதிபலிப்பு பங்குச் சந்தையில் அதிகமாகவே காணப்பட்டது. அதிலும் குறிப்பாக, பொருளாதாரத் தேக்கநிலை வங்கித் துறையை கடுமையான சிக்கலுக்கு உள்ளாக்கியது. என்பிஏ என அழைக்கப்படும் வாராக் கடனின் அளவானது கடந்த சில வருடங்களாக உச்சத்திலேயே இருந்து வருவது வங்கித் துறைக்கு மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்