ஷேர்லக்: ஐசிஐசிஐயை பின்னுக்குத் தள்ளிய கோட்டக் மஹிந்திரா!

‘‘சென்னையில் நீர் நடத்திய கான்க்ளேவ் அருமை என்று ஏகத்துக்கும் புகழ்ந்தார்கள் என் நண்பர்கள். ஸாரி, என்னால்தான் வர முடியவில்லை’’ என்று வந்ததும் வராததுமாக வருத்தம் தெரிவித்தார் ஷேர்லக். ‘‘கவலைப்படாதீர், கான்க்ளேவ்-ல் நடந்த அத்தனை விஷயங்களையும் அனைத்து வாசகர்களும் படித்து பயன் பெறவேண்டும் என்பதற்காக நாணயம் விகடனில் விளக்கமாக எழுதுவோம்’’ என்றபடி செய்திகள் பக்கம் அவர் கவனத்தை திருப்பினோம். ‘‘சந்தை இந்த வாரத்தில் மீண்டு எழுந்திருக்கிறதே!’’ என்றபடி பேச்சைத் தொடங்கினோம். 

‘‘எஃப்ஐஐகள் தொடர்ந்து வெளியேறி வருகிறார்கள்.  அவர்களைப் பொறுத்தவரை, உலக நிலைமையே சரியில்லாதபோது இந்தியாவில் என்ன லாபம் கிடைத்துவிடும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் பங்குகளை விற்க, நம்மவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் தொடர்ந்து வாங்குகிறார்கள். 2015-ம் ஆண்டில் மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோ 4.37 கோடியாக அதிகரித்துள்ளது. 2008-ல் விழுந்த சந்தை இரண்டு ஆண்டுகளில் திரும்ப எழுந்தது. இப்போது சந்தை சரிவில் இருந்தாலும் அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் திரும்ப எழாமல் போய்விடுமா என்பதே சிறு முதலீட்டாளர்களின் சிந்தனையாக இருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்