வங்கி வாராக் கடன் பற்றி வெள்ளை அறிக்கை வேண்டும்!

ஹலோ வாசகர்களே..!

டந்த வாரத்தில் எஸ்.பி.ஐ. வங்கியின் நிகர லாபம் ஏறக்குறைய 62 சதவிகிதமும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் லாபம் ஏறக்குறைய 93 சதவிகிதமும் குறைந்து, ஒட்டுமொத்த சந்தையும் ஆட்டம் காண வைத்தது. இந்த இரு வங்கிகளின் வாராக் கடன் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததே, இதற்கு காரணம். 

பொதுத்துறை வங்கிகளின் நிகர வாராக்கடன் குறைந்தபட்சம் 5.10% முதல் அதிகபட்சம் 9.57 சதவிகிதமாக உயர்ந்துள்ளன. தனியார் வங்கிகளில் முன்னணி வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் நிகர வாராக் கடன் அளவு 4.72 சதவிகிதத்தை எட்டியுள்ளது.

வங்கிகள் வாராக் கடன் பிரச்னை புரையோடிப் போன புற்றுநோயாக மாறி இருப்பதையும், இதனால் ஏற்பட்ட புண்ணுக்கு ‘பேண்ட் எய்ட்’ போட்டு சரிசெய்ய நினைப்பதைவிட, அறுவை சிகிச்சை செய்வதுதான் சரி என ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் சொல்லி இருப்பதை நிச்சயமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். காரணம், வங்கிகளின் வாராக் கடன் இன்று முளைத்த பிரச்னை அல்ல. 2008-க்குப் பிறகே இந்த பிரச்னை கள்ளிச்செடி போல வேகமாக பரவி வளர ஆரம்பித்தது. அந்த சமயத்திலேயே வங்கிகள் ஒன்றுகூடி இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வழிமுறைகளைக் கண்டறிந்திருக்கலாம். இப்படி செய்வதற்கு பதிலாக தகுதியற்ற நிறுவனங்களுக்கு கடனை அள்ளி அள்ளித் தந்தது. அப்படி தந்த கடனும் ஒழுங்காக திரும்பி வரவில்லை என்றபோதும், பழைய கடனை அடைக்க புதிய கடனைத் தந்து, பிரச்னையை  மறைக்க முயற்சித்ததே தவிர, வாராக் கடன் பிரச்னையைத் தீர்க்க எந்த வகையிலும் முயலவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்