பாலிசிதாரர்களுக்கு பயன் அளிக்குமா எல்ஐசியின் இ-சர்வீஸ்?

இரா.ரூபாவதி

பொதுத் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி சமீபத்தில் இ-சர்வீஸ் முறையை அறிமுகப்படுத்தியது. எல்ஐசியில் ஏற்கெனவே ஆன்லைனில் பிரீமியம் செலுத்தும் வசதி இருந்துவந்தாலும், அந்தச் சேவையை பெறுவதற்கு அதன் கிளை அலுவலகத்துக்கு நேரடியாக சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தரவேண்டும். ஆனால், இ-சேவை மூலமாக இனி வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பிரீமியம் கட்ட முடியும். மேலும், இ-சேவை மூலம் புதிதாக எடுக்கும் பாலிசிகளின் பத்திரத்தை இ-வடிவத்தில் பெற்றுக் கொள்ள முடியும். இந்த இ-சேவையினால் பாலிசிதாரர்களுக்கு என்ன பயன் கிடைக்கும்? 

எல்ஐசி-யின் இ-சேவை வசதி பெறுவதற்கு http://www.licindia.in/NewUserRegistration.htm  என்ற இணையதளத்தில் பதிவு செய்வது அவசியம். இதில் புதிதாக ஆன்லைன் சேவையைப் பெறுபவர்கள் தங்களின் பாலிசி எண், ஒவ்வொரு தவணைக்கும் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை, பிறந்த தேதி, செல்போன் எண், மெயில் ஐடி ஆகிய தகவல்களை கொடுத்துப் பதிவு செய்யவேண்டும். அதன்பிறகு வரும் இ-சேவை படிவத்தை பாலிசிதாரர் பிரின்ட் எடுத்து கையொப்பம் இடவேண்டும். இதனுடன் பாலிசிதாரரின் புகைப்பட சான்று, முகவரி சான்று ஆகியவற்றையும் ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டும்.

ஏற்கெனவே எல்ஐசியின் போர்ட்டல் சேவையை வைத்திருப்பவர்கள் இ-சேவையைப் பெற  ஆவணங்களை ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டும். ஆவணங்களை செல்போனில் போட்டோ எடுத்து அப்லோடு செய்யக் கூடாது. இதனால் ஆவணங்களின் தரம் குறைந்து,  ஆவணத்தின் உண்மைத் தன்மையை அறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, ஆவணங்களை ஸ்கேன் செய்து அனுப்புவது அவசியம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்