மாதம் ரூ. 5,000 முதலீடு... இருபது வருடத்தில் எவ்வளவு கிடைக்கும்?

கேள்வி - பதில்

?என் வயது 29. ஐசிஐசிஐ புரூடென்ஷியல் வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட் ரெகுலர் பிளானில் (குரோத்) நவம்பர் 2015-லிருந்து மாதம் ரூ.5,000 முதலீடு செய்து வருகிறேன். 20 வருடங்கள் கழித்து எனக்கு மொத்தமாக எவ்வளவு ரூபாய் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது?

கலீல் அகமது,

செந்தில் மதிவதனன், நிதி ஆலோசகர், penguwin.com.

“நீங்கள் நல்ல ஃபண்டில்தான் முதலீடு செய்திருக்கிறீர்கள். இந்த ஃபண்ட்  ஆரம்பம் முதல் இன்று வரை அதிகபட்சமாக 22.67% ஆண்டு வருமானத்தை கொடுத்துள்ளது.

மாதம் ரூ.5,000 வீதம் 20 வருடங்களுக்கு நீங்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்து வந்தால், 22.67% அடிப்படையில் சுமார் 2 கோடி ரூபாய் கிடைக்கும். எதிர்காலத்தில் இதே வருமானம் கிடைக்கும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை.

என்றாலும் நீண்ட கால அடிப்படையில் 15% ஆண்டு வருமானமாக கிடைக்க வாய்ப்புள்ளது. 20 வருடத்தில் உங்களின் மொத்த முதலீடு ரூ.12 லட்சம். இந்த முதலீட்டுக்கு 15% ஆண்டு வருமானமாக கிடைத்தால,் 20 வருட முடிவில் சுமார் ரூ.75 லட்சம் உங்களுக்கு கிடைக்கும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்