கான்க்ளேவ்! எஃப்.டி.யில் ரூ.90 லட்சம் கோடி..!

மு.சா.கெளதமன்

நாணயம் விகடன், பிர்லா மியூச்சுவல் ஃபண்ட், ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட், ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து  ஃபைனான்ஸ் மற்றும் பிசினஸ் கான்க்ளேவ் - 2016 என்னும் சிறப்புக் கருத்தரங்கத்தை சென்னையில் நடத்தியது.

இந்தக் கருத்தரங்கத்தில் முதல் நாளன்று  பிற்பகலில் நடந்த   நிகழ்ச்சிகள் பற்றி பார்ப்போம்.

குடும்பத்துடன் வாங்க!

மதிய உணவுக்குப்பின் முதலில் பேசினார் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் கே.எஸ்.ராவ்.

‘‘இந்தியாவில்தான் பணத்தை கடவுளாக பாவித்து அதை மதிக்கிறோம். ஆனால், மேற்கத்திய கலாசாரத்தில் பணத்தையும் ஒரு பொருளாகவே பார்க்கிறார்கள். ஒவ்வொரு ரூபாயையும் நாம் மதித்து அதை சரியாக கையாண்டால், நம் பணம் நமக்காக உழைக்கும். அப்படி நம் பணத்தை நமக்கு உழைக்க வைக்கும் ஒரு கருவிதான் மியூச்சுவல் ஃபண்ட்.

இது போன்ற கருத்தரங்குக்கு செல்லும்போது நம் வாழ்வில் மறுபாதியான மனைவியையும் கட்டாயம் அழைத்துச் செல்ல வேண்டும். அப்படி அழைத்துச் செல்வதன் மூலம் நம் நிதித் திட்டமிடல் இன்னும் எளிதாகவும், முழுமனதுடனும்  இலக்கை நோக்கி பயணிக்க முடியும்’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்