கலகல காரைக்குடி, மளமள மதுரை... தென் மாவட்டங்களில் பெருகும் முதலீட்டு விழிப்பு உணர்வு!

ராகினி ஆத்மவெண்டி மு.

நாணயம் விகடன், இன்டகிரேட்டட், என்எஸ்டிஎல், என்எஸ்இ நிறுவனங்களோடு இணைந்து ‘செல்வத்தை சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா அஸெட் அலோகேஷன்’ என்கிற தலைப்பில் நடத்திய முதலீட்டாளர் விழிப்பு உணர்வுக் கூட்டம் சமீபத்தில் காரைக்குடி மற்றும் மதுரையில் நடந்தது.

இந்த விழிப்பு உணர்வுக் கூட்டத்தில் முதலில் பேசினார் இன்டகிரேட்டட் நிறுவனத்தின் துணைத் தலைவர் செல்வகுமார். ‘‘வங்கி எஃப்.டி. சேமிப்போ அல்லது பங்குச் சந்தை முதலீடோ எதை செய்வதாக இருந்தாலும் அதை முழுமையாகப் புரிந்துகொண்டு செய்ய வேண்டும் என்பதுதான் இன்டகிரேட்டட் நிறுவனத்தை நிறுவிய வைத்தியநாதன் அவர்களின் நோக்கம். அவர் ஒரு ஆடிட்டர். சாதாரண மக்களும் முதலீட்டின் அவசியத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக 1974-ம் ஆண்டு இன்டகிரேட்டட் நிறுவனத்தைத் தொடங்கினார். அன்றிலிருந்து சேமிப்பு மற்றும் முதலீட்டின் அவசியத்தை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லி வருகிறோம்’’ என்றார். 30 ஆண்டுகளுக்கு முன்பே காரைக்குடியில் தனது கிளையை இன்டகிரேட்டட் நிறுவனம் தொடங்கியது ஆச்சரியமான விஷயம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்