கம்பெனி ஸ்கேன்: விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட்! NSE SYMBOL: VRLLOG

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய எடுத்துக்கொண்டுள்ள  நிறுவனம் ‘விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட்’  (NSE SYMBOL: VRLLOG) என்னும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் ஆகும்.

1976-ம் ஆண்டு ஒரே ஒரு லாரியுடன் வட கர்நாடகாவில் கடஹ் என்ற சிறிய ஊரில் ஆரம்பிக்கப்பட்டு, இன்றைக்கு இந்தியாவில் 28 மாநிலங்களிலும் நான்கு  யூனியன் பிரதேசங்களிலும்,  நேபாளில் காட்மாண்டுவிலும்  1,013 கிளைகளுடனும் (606 இடங்களில் தன்னுடைய கிளை ஏனையவை ப்ரான்சைஸ்கள் மற்றும் ஏஜென்ட்டுகள்) செயல்படுகிறது.

பயணிகள் பயணிக்கும் 368 கமர்ஷியல் வாகனங்கள், சரக்குகள் கொண்டு செல்லும் 3,739 கமர்ஷியல் வாகனங்கள் போன்றவற்றை தன்னிடத்தே கொண்டு இந்தியாவின் நம்பர் ஒன் தனியார் நிறு வனமாக செயல் படுகிறது.

சரக்கு கொண்டு செல்லுதல் என்பதில் ஆரம்பித்த இந்த நிறுவனம் பின்னர் வாடிக்கையாளர் களின் தேவைகளுக்கு ஏற்ப கூரியர் சர்வீஸ், பிரையாரிட்டி கார்கோ சர்வீஸ், தேர்ட்பார்ட்டி லாஜிஸ்டிக்ஸ் சேவை, வேர்ஹவுஸ் வசதிகள் மற்றும் ஏர் சார்ட்டரிங் சேவை போன்ற சேவைகளிலும் கால் பதித்ததால், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களால் தவிர்க்க முடியாத ஒரு சரக்குப் போக்குவரத்தை கையாளும் நிறுவனமாக திகழ்கிறது எனலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்