ஷேர்லக்: கரடியின் பிடியில் இந்தியப் பங்குச் சந்தை!

ப்போது வருவார், நம் கேள்விகளுக்கு பதில் சொல்வார் என்று காத்திருந்தோம் ஷேர்லக்கின் வருகையை எதிர்பார்த்து. வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணிக்கு சொல்லி வைத்த மாதிரி நம் கேபினில் நுழைந்தார். அவரை உட்கார வைத்து நாம் கேட்ட முதல் கேள்வி, ‘‘வியாழக்கிழமை சென்செக்ஸ் 807 புள்ளிகள் வீழ்ச்சி கண்டதே, என்ன காரணம்?’’ என்பதுதான்.

‘‘இந்தக் கேள்வியைத்தான் நீர் கேட்பீர் என்று தெரியும்!’’ என்று சிரித்தபடி, பதில் சொல்ல ஆரம்பித்தார்.

சந்தை சரியக் காரணங்கள்!

‘‘இந்திய நிறுவனங்களின் மோசமான டிசம்பர் காலாண்டு முடிவுகள், சர்வதேச பொருளாதார மந்தநிலை குறித்த பயம் போன்றவற்றால் சந்தை இந்த இறக்கத்தைக் கண்டது. வங்கிகளின் வாராக் கடன் கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, எஸ்பிஐ (5%), ஐசிஐசிஐ பேங்க் (4.7%), சென்ட்ரல் பேங்க் (9%), பேங்க் ஆஃப் இந்தியா (9%), பிஎன்பி (8.5%), யுனைடெட் பேங்க் (9.5%) போன்ற வங்கிகளின் மொத்த வாராக் கடன் அதிகமாக உள்ளது. இந்தக் கடனுக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டு வருவதால், வங்கிகளின் நிகர லாபம் டிசம்பர் காலாண்டில் குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இறக்கம் கண்டிருக்கிறது. இந்தக் காரணங்களால் கடந்த வியாழக்கிழமை அன்று சந்தை கணிசமாக இறக்கம் கண்டது.

சந்தை இறக்கத்திலும் ஓர் ஆச்சரியமான வரலாற்று ஒற்றுமை நிகழ்ந்திருக்கிறது. எட்டு ஆண்டுகளுக்குமுன், அதாவது 2008 பிப்ரவரி 11-ம் தேதி சென்செக்ஸ் 833.98 புள்ளிகள் வீழ்ச்சிக் கண்டிருக்கின்றன. இப்போது 2016 பிப்ரவரி 11-ம் தேதி சென்செக்ஸ் 807.07 புள்ளிகள் வீழ்ந்திருக்கிறது’’ என்றவரிடம் பரபரப்பாக நாம் கேட்ட அடுத்த கேள்வி, ‘‘வங்கிப் பங்குகளில் எல்ஐசி முதலீட்டை அதிகரித்து வருகிறதே?’’ என்பதுதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்